ஹோம் /நியூஸ் /திருப்பூர் /

'சட்டையை கழற்றி விட்டு ஒத்தைக்கு ஒத்தை வா.." போலீசாரை மிரட்டிய பாஜக நிர்வாகி கைது!

'சட்டையை கழற்றி விட்டு ஒத்தைக்கு ஒத்தை வா.." போலீசாரை மிரட்டிய பாஜக நிர்வாகி கைது!

காவலரை வம்புக்கு இழுத்த பாஜக நிர்வாகி

காவலரை வம்புக்கு இழுத்த பாஜக நிர்வாகி

Tiruppur District News : காங்கேயத்தில் சட்டையை கழட்டி வைத்துவிட்டு “ஒத்தைக்கு ஒத்தை வா” என காவலரை வம்புக்கு இழுத்த பாஜக நிர்வாகி கைது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

தாராபுரத்தில் இருந்து காங்கேயம் வந்த அரசு பேருந்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக போலீசாருக்கும், பாஜக நிர்வாகிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக இரு தரப்பினரும் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு சென்று போலீஸ் அதிகாரிகள் இரு தரப்பிலும் விசாரிக்கையில் இரு தரப்பினருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின் பாஜக மாவட்ட பொதுசெயலாளர் ஜெகன், நகர தலைவர் சிவபிரகாஷ் உள்பட  நிர்வாகிகள் சிலருடன் சேர்ந்து கொண்டு பாஜக மாவட்ட செயலாளர் ராஜா பணியில் இருந்த ரமேஷ் என்ற போலீசாரை ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த பாஜகவின் மாநில துணைத்தலைவர்!

மேலும், சட்டையை கழட்டி வைத்து விட்டு ஒத்தைக்கு ஒத்தை வா பாக்கலாம்” என கூறியதாகவும் அதையடுத்து சக போலீசார் அவரை சமாதானம் பேசி அனுப்பி வைத்தாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வீடியோ இணையத்தில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், காவலரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக செயலாளர் ராஜா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

First published:

Tags: Crime News, Local News, Tiruppur