திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வீரபாண்டி மண்டலத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மாற்றுக்கட்சியினர் பாஜகவில் தங்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சியில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இந்ந நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, என்னிடம் வாட்ச் பில் கேட்கிறார்கள். நான் அதனை தருவதற்கு நேரம் சொல்லி விட்டேன். இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஆட்சியில் உள்ள திமுக சாமான்ய மனிதனை பார்த்து பில் கேட்கிறார்கள்.
இந்த வாட்ச்க்கு பில் மட்டும் இல்லை 13 ஆண்டுகள் சம்பாதித்தது முழுமையும் கணக்கு கொடுக்கிறேன். எனக்கு 80 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை சம்பளம் வந்துள்ளது. 13 லட்சம் வரை கிரெடிட் கார்டு பில் கட்டி உள்ளேன். இதன் விவரங்களை தனி வலைதளத்தில் முழுமையாக வெளியிடுகிறேன். அதே பிரஸ் மீட்டில் திமுக பினாமி அமைச்சர்கள் சொத்து கணக்கையும் வெளியிடுகிறேன். 2 லட்சம் கோடி ரூபாய் சொத்து சேர்த்து உள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் மகன் சொகுசு கார் வாங்கிய பில் சேர்த்து வெளியிடுவேன். முதல்வர் முதல் அனைவரின் சொத்து பட்டியல் விவரம் மற்றும் முதல்வரின் மருமகன் அணிந்த 12 லட்ச ரூபாய் வாட்ச் முதல் ஸ்டாலின் என்னென்ன வாட்ச் அணிந்தார் என்ற விவரங்களையும் வெளியிடுகிறேன். இரண்டு தலைமுறை வளர்ச்சிக்கான தொகையை ஊழல் செய்துள்ளனர்.
Also Read : திமுக கூட்டணிக்கு வர கமல்ஹாசன் தயார்..”காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை
இந்தோனேசியாவில் துறைமுகம் வைத்துள்ளனர். திமுக அமைச்சர், எம்எல்ஏக்கள் வைத்துள்ள இன்ஜினியரிங் காலேஜ் மற்றும் 150 ஏக்கர் நிலம் என ஒவ்வொன்றையும் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது, 2 லட்சம் கோடியா அல்லது பாஜக வா என மக்கள் கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
ஊழலை எதிர்க்கும் ஒரே கட்சி பாஜக. உதயநிதி அல்ல இன்பநிதி வந்தாலும் வாழ்க என அமைச்சர் கே.என்.நேரு சொல்கிறார். நீங்கள் அடிமையாக இருக்க தயாராக உள்ளீர்கள். தமிழகம் அடிமையாக இருக்க முடியாது. ஏப்ரலுக்கு பிறகு நமது நடைபயணத்தில் ஊழல், குடும்ப ஆட்சி, மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்க உள்ளேன் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
ரஃபேல் வாட்ச் மீதான வார்த்தை போர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் அண்ணாமலைக்கும் இடையே தீவிரமடைந்து வருகிறது. ரஃபேல் வாட்ச்சிற்கான பில்லை இன்று மாலைக்குள் வெளியிடுவாரா என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சவால் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.