ஹோம் /நியூஸ் /திருப்பூர் /

நித்தியானந்தா என நினைத்து என் ஆசிரமத்தை இடித்துவிட்டனர்.. காவல்நிலையம் முன் கதறிய பாஸ்கரானந்தா..

நித்தியானந்தா என நினைத்து என் ஆசிரமத்தை இடித்துவிட்டனர்.. காவல்நிலையம் முன் கதறிய பாஸ்கரானந்தா..

பாஸ்கரானந்தா

பாஸ்கரானந்தா

இது குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால் தற்கொலை செய்துக்கொள்ள போவதாகவும் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Palladam, India

நித்யானந்தா என நினைத்து தன் ஆசிரமத்தை வங்கி அதிகாரிகாரிகள் இடித்துவிட்டதாக பல்லடம் காவல்நிலையத்தில் சுவாமி பாஸ்கரானந்தா புகார் அளித்துள்ளார்.

கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கரானந்தா, அவர் தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆன்மீக பணி மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரணம்பேட்டை அருகே செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஆசிரமம் அமைக்க சுமார் ரூ. 1.5 கோடி வரை முன்பணமாக கொடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் அந்த இடத்தில் கட்டப்பட்டுவந்த ஆசிரமத்தில் உள்ள தனது அறையில் இருந்த 25 சவரன் தங்க நகைகள் காணாமல் போனதாக பல்லடம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பாஸ்கரானந்தா புகார் மனு அளித்திருந்தார்.

இந்நிலையில் ஆசிரம கட்டிடங்கள் முழுவதுமாக இடிக்கப்பட்டதாக வெளியூரில் இருந்த பாஸ்கரானந்தாவிற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து பல்லடம் காவல்நிலையத்திற்கு தனது பக்தர்களுடன் நேரில் வந்து ஆசிரமத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஸ்கரானந்தா, செல்வகுமார் என்பவரிடம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒப்பந்தம் போட்டு ஆசிரமம் கட்டியதாகவும் கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் எந்த முன்னறிவிப்பும் இன்றி வங்கியில் கடன் பெற்றிருப்பதாக வீட்டின் முன்பு அறிவிப்பை ஒட்டிவிட்டு சம்பந்தமே இல்லாமல் தனது ஆசிரம கட்டிடங்களை பொக்லைன் இயந்திரம் கொண்டு இரவோடு இரவாக மர்மநபர்கள் இடித்துவிட்டதாக புகார் அளித்துள்ளார்.

இதையும் வாசிக்க: மியான்மரில் சிக்கி தவித்த தமிழர்கள் பத்திரமாக மீட்பு... இன்று சென்னை திரும்புகின்றனர்

மேலும் கருவறையில் வைக்கப்பட்டிருந்த விலை மதிப்பற்ற வைர வைடூரியங்களை திருடிச்சென்றுவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால் தற்கொலை செய்துக்கொள்ள போவதாகவும் தெரிவித்தார்.

தான் சுவாமி நித்யானந்தா போல்  போல் இருப்பதால் தான் ஆசிரமம் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் என சந்தேகிப்பதாக சுவாமி பாஸ்கரானந்தா தெரிவித்தார்.

Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Nithyanandha, Palladam, Police station