ஹோம் /நியூஸ் /திருப்பூர் /

கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் சப்-கலெக்டர் ஆனேன் - நடிகர் சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன்

கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் சப்-கலெக்டர் ஆனேன் - நடிகர் சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன்

நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ருதுஜெயந்த் நாராயணன்

நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ருதுஜெயந்த் நாராயணன்

Tiruppur | பெற்றோர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தால் இந்த நிலையை அடைந்தேன் என திருப்பூர் சார் ஆட்சியராக பொறுப்பேற்ற நடிகர் சின்னிஜெயிந்த் மகன் ஸ்ருதன்ஜெய் நாராயணன் தெரிவித்துள்ளார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்டம் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ருதன்ஜெய் நாராயணன் திருப்பூர் குமரன் சாலையில் உள்ள சார் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்றார். அவருக்கு சார் ஆட்சியர் அலுவலக பணியாளர்கள் வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர். மாவட்ட துணை ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்ருதுஞ்ஜெய் நாராயணன் பிரபல நடிகர் சின்னிஜெயிந்த் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவியேற்ற பின்னர் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்தியேகமாக பேசிய அவர், மூத்த அதிகாரிகள் மற்றும் வருவாய் அலுவலர்களுடன் இணைந்து தனது முழு உழைப்பையும் திருப்பூருக்கு வழங்குவேன் என தெரிவித்தார்.

பிரபல நடிகர் சின்னிஜெயந்தின் மகனாக இருந்துக் கொண்டு இந்த துறையில் எப்படி ஆர்வம் வந்தது என்ற  கேள்விக்கு பதிலளித்தவர், திரைத்துறையை சேர்ந்த குடும்பம் என்றாலும் கல்விக்கு தனது பெற்றோர் எப்போதும் முக்கியத்துவம் அளித்ததால் தான் இந்த நிலையை நான் அடைய முடிந்தது. அதற்கு தனது பெற்றோருக்கு நன்றி என தெரிவித்தார்.

Also see... ஆசைவார்த்தை கூறி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - இளைஞர் போக்சோவில் கைது

அத்துடன் நல்ல ஆசிரியர் மற்றும் நண்பர்களின் ஆதரவும் தனக்கு கிடைத்துள்ளது. அவர்கள் அனைவருக்கும் எனது நன்றி என தெரிவித்தார்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Actor, District collectors, Tiruppur