ஹோம் /நியூஸ் /திருப்பூர் /

திருப்பூரில் விபத்து இழப்பீடு வழங்காததால் 4 அரசு பேருந்துகள் ஜப்தி

திருப்பூரில் விபத்து இழப்பீடு வழங்காததால் 4 அரசு பேருந்துகள் ஜப்தி

அரசு பேருந்து ஜப்தி

அரசு பேருந்து ஜப்தி

Tiruppur | திருப்பூரில் விபத்தை ஏற்படுத்தி விட்டு இழப்பீடு தராமல் அலைகழித்த நான்கு அரசு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

கோவை கோட்டத்திற்கு உட்பட்ட திருப்பூர் காங்கேயம் சாலை பணிமனையில் இருந்து இயங்கி வரும் 4 அரசு பேருந்துகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  விபத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இழப்பீடு வழங்க  நீதிமன்றம்  உத்தரவிட்டிருந்தது. எனினும்  இழப்பீடு தொகையை வழங்காமல்  போக்குவரத்து கழகம் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள் இழப்பீடு தொகையை போக்குவரத்து கழகம் வழங்க மறுப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் குறிப்பிட்ட நான்கு பேருந்துகளையும் ஜப்தி செய்து ஏலம் விட்டு இழப்பீடு தொகையை வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Also see... Also see... வேலூரில் தெருக்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்

இதனையடுத்து திருப்பூர் நீதிமன்ற ஊழியர்கள் தற்காலிக பேருந்து நிலையத்தில்  பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட தயாராக இருந்த 4 அரசு பேருந்துகளையும் தடுத்து ஜப்தி செய்தனர். இதனையடுத்து 4 பேருந்துகளும் நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது‌‌ குறிப்பிடத்தக்கது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Bus, Thiruppur