Home /News /tiruppur /

போலி அரெஸ்ட் வாரண்ட் தயாரித்து மில் உரிமையாளரை கடத்த முயற்சி.. ஆந்திராவை சேர்ந்த 3 பேர் கைது

போலி அரெஸ்ட் வாரண்ட் தயாரித்து மில் உரிமையாளரை கடத்த முயற்சி.. ஆந்திராவை சேர்ந்த 3 பேர் கைது

ஆந்திராவை சேர்ந்த கும்பல்

ஆந்திராவை சேர்ந்த கும்பல்

Tiruppur district News : திருப்பூரில் போலி அரெஸ்ட் வாரண்டை பயன்படுத்தி டெக்ஸ்டைல் உரிமையாளர்களை கடத்தி, பணம் பறிக்க ஆந்திராவைச் சேர்ந்த கும்பல் திட்டமிட்டு செயல்பட்டது அதிச்ர்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruppur | Andhra Pradesh
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாணிக்கபுரத்தை சேர்ந்தவர் தமிழ் செல்வன். இவர் அதே ஊரில் அர்ணோதயா  டெக்ஸ்டைல் என்ற பெயரில் ஜவுளி உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள இடுப்புலபாடு காட்டன் மில் உரிமையாளர் பிரம்ம நாயுடு  என்பவரிடம், கடந்த 2019 முதல் 2020 வரை  70 லட்சம் ரூபாய் மதிப்பிலான நூல்களை வாங்கியுள்ளார்.

இதற்காக 26 லட்சம் ரூபாய் தொகையை மில் உரிமையாளருக்கு தமிழ்ச்செல்வன் பாக்கி வைத்துள்ளார். பாக்கித் தொகையை தர தமிழ்செல்வன் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று ஆந்திரா மாநில காவல்துறையை சேர்ந்த ஒருவருடன் வந்த  காட்டன் மில் ஊழியர்கள் தமிழ்செல்வனை கைது செய்து அழைத்துச் செல்ல  கைது உத்தரவு பெற்றுள்ளதாகவும், அவரை கைது செய்து ஒப்படைக்குமாறும் பல்லடம் காவல் நிலையத்தில் மனு அளித்தனர்.

இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ஆந்திராவில் இருந்து வந்த மில் நிர்வாகிகள் கொண்டு வந்தது போலி வாரண்ட் என்பதை தமிழ்ச்செல்வன் தரப்பு வழக்கறிஞர்கள் உறுதி செய்தனர். இதற்கிடையே இடுப்புலபாடு காட்டன் மில் நிர்வாகிகளுடன் வந்த ஆந்திர மாநில போலீஸ் கோபி திடீரென மாயமானார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கைது செய்யப்பட்டவர்கள்


போலியாக  அரெஸ்ட் வாரண்ட் தயாரித்து எடுத்து வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரவிக்குமார், வெங்கட கிருஷ்ணா, மற்றும் வெங்கடேஸ்வரலு ஆகிய மூவரையும் பல்லடம் போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான மில் மேலாளர் சத்யநாராயணா, மற்றும் ஆந்திர போலீஸ் கோபி ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

போலி அரெஸ்ட் வாரெண்ட்


Must Read : மோசடி வழக்கு... விஷம் குடித்த இந்து மக்கள் கட்சி பிரமுகர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

போலி அரெஸ்ட் வாரண்ட்டை பயன்படுத்தி டெக்ஸ்டைல் உரிமையாளர் தமிழ்செல்வனை கடத்தி, பணம் பெறவே இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பல்லடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போல பல்லடத்தில் உள்ள மேலும் சில ஜவுளி உற்பத்தியாளர்களையும் இதே பாணியில் கடந்துவதற்கு அந்த கும்பல் திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Suresh V
First published:

Tags: Andhra Pradesh, Arrested, Crime News, Kidnapping Case, Tiruppur

அடுத்த செய்தி