ஹோம் /நியூஸ் /திருப்பத்தூர் /

வாணியம்பாடியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது!

வாணியம்பாடியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது!

வாணியம்பாடியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது!

வாணியம்பாடியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது!

Tirupathur | வாணியம்பாடியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 இரு சக்கர வாகனங்கள், மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல்  செய்யப்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tirupathur (Tiruppattur), India

  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் கூட்டு சாலையில் கிராமிய காவல் ஆய்வாளர் அருண்குமார் தலைமையில் போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்கு  பின்  முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் வாணியம்பாடி ஆம்பூர்பேட்டை பகுதியை சேர்ந்த விஜய்( வயது19) என்பது தெரியவந்தது.

  தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் வாணியம்பாடியில் சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

  Also see...கோவை கார் வெடிப்பு ஒரு திட்டமிட்ட தாக்குதல் - என்ஐஏ

  இதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்த 3 இருசக்கர வாகனங்கள், இரண்டு செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

  செய்தியாளர்: M.வெங்கடேசன்,திருப்பத்தூர் 

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Arrested, Bike Theft, Thief, Thirupathur, Two Wheeler