Home /News /tirupattur /

தந்தையுடன் பைக்கில் பள்ளிக்கு சென்ற 2 மாணவிகள் லாரி மோதிய விபத்தில் உயிரிழப்பு... ஆம்பூரில் சோக சம்பவம்

தந்தையுடன் பைக்கில் பள்ளிக்கு சென்ற 2 மாணவிகள் லாரி மோதிய விபத்தில் உயிரிழப்பு... ஆம்பூரில் சோக சம்பவம்

தந்தையுடன் பைக்கில் சென்ற 2 மாணவிகள்  விபத்தில் உயிரிழப்பு

தந்தையுடன் பைக்கில் சென்ற 2 மாணவிகள் விபத்தில் உயிரிழப்பு

இந்த விபத்தில் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பள்ளி மாணவிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், தந்தை தண்டபாணி படுகாயம் அடைந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ambur, India
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம்  ஊராட்சி குமராமங்கலம்  பகுதியை சேர்ந்த தண்டபாணி வயது (47). இவர் பிளாஸ்டிக் கதவு ஜன்னல்கள் செய்யும் கடை  நடத்தி வருகிறார் இவரது மனைவி அனுராதா வயது (40) இவர்களுக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளன.

    அவர்கள் ஆம்பூர் கோவிந்தபுரம் பகுதியில் உள்ள  தனியார் மெட்ரிகுலேஷன் பளிளியில் ஜெயா ஸ்ரீ (வயது 17) பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். இவரது 2-வது மகள் வர்ஷா (வயது 11) 6 வகுப்பு படிக்கின்றார்.  இருவரும் தினசரி பள்ளி வாகனங்கள் மூலம் பள்ளி சென்று வந்தனர்.

    இன்று இவர்கள் பள்ளி வாகனத்தை தவற விட்டதால், தண்டபாணி இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்றபோது, ஆம்பூர் ஓ ஏ ஆர் தியேட்டர் சிக்னல் அருகே ஓசூரில் இருந்து சென்னைக்கு சென்ற கனரக கண்டெய்னர் லாரி  தேசிய நெடுஞ்சாலையில் முன்னே சென்ற இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    Also Read : பள்ளி வேனில் மாணவி உறங்குவதை கவனிக்காமல் கதவை மூடிய டிரைவர்... மூச்சு திணறி சிறுமி உயரிழந்த சோகம்

    இந்த விபத்தில் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பள்ளி மாணவிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் தந்தை தண்டபாணி படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் நகர போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் படுகாயம் அடைந்த தண்டபாணியை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்பூரில் தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றபோது லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் இரண்டு பள்ளி மாணவிகள்  உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை அங்கிருந்த பொதுமக்கள் பிடித்து தர்மடி கொடுத்து காவல் துறையினர் இடம் ஒப்படைத்துள்ளனர்.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: Accident, Died, Girl students

    அடுத்த செய்தி