முகப்பு /செய்தி /திருப்பத்தூர் / வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பி வசமாக சிக்கிய இளைஞர்... திருப்பத்தூரில் ஜன்னல் வழியே கதறியதால் பரபரப்பு!

வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பி வசமாக சிக்கிய இளைஞர்... திருப்பத்தூரில் ஜன்னல் வழியே கதறியதால் பரபரப்பு!

வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பியவர்

வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பியவர்

Tirupathur News : திருப்பத்தூரில் தொடந்து சாதி பெயரை குறிப்பிட்டு ஆபாசமாக பேசி வாட்ஸ்அப்பில் பரவ செய்த இளைஞரை பொதுமக்கள் மன்னிப்பு கேட்க வைத்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirupathur, India

திருப்பத்தூர் மாவட்டம்  தங்கபுரம் பகுதியை சேர்ந்த பழனி மகன் நந்தகுமார்(33), இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள சொமேட்டோ நிறுவனத்தில் உணவு டெலிவரி ஊழியராக வேலை செய்து வருகிறார். மேலும் இவர் தொடர்ந்து வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் பட்டியல் இனத்தவர்களை ஆபாசமாக பேசியும், சாதி பெயரை குறிப்பிட்டு பேசியும் வந்துள்ளார். தனக்கு அனைத்தும் தெரியும் என்பது போல கருத்துக்களை கூறி வாட்ஸ்அப்பில் பரவ செய்துள்ளார். அதேபோல் பத்திரிகை நிறுவனங்களையும் செய்தியாளர்களை பற்றியும் சில தினங்களுக்கு முன்பு ஆபாசமாக பேசி சமூக வலைத்தளங்களில் பரவ செய்துள்ளார்.

இந்நிலையில், இதனை அறிந்த பட்டியல் இனத்தவர்கள் 30க்கும் மேற்பட்டோர் நந்தகுமாரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனை அறிந்த நந்தகுமார் அவர்களை பார்த்து வீட்டின் கதவை உள்பக்கமாக தாழிட்டு கொண்டார். மேலும் வெளியே வராமல் ஜன்னல் வழியாக நந்தகுமார் நின்று அவர்களிடம் பேசினார். ஆனாலும் பொதுமக்கள் அங்கிருந்து செல்லாததால் வேறு வழியின்றி பொதுமக்களை பார்த்து தான் செய்தது தவறுதான். தன்னை மன்னித்து விடுங்கள் சாமிகளா என்று கூறி அவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து பட்டியலினத்தவர்களை பற்றி ஆபாசமாக பேசி சமூக வலைதளங்களில் பரவ செய்து வரும் நந்தகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வாட்ஸ்அப்பில் கண்டபடி பேசிவிட்டு தப்பிவிடலாம் என நினைத்தவருக்கு பொதுமக்கள் கொடுத்த தண்டனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர்: வெங்கடேசன் - திருப்பத்தூர்

First published:

Tags: Crime News, Local News, Thirupathur