ஹோம் /நியூஸ் /Tirupattur /

கண்டெய்னர் லாரி மீது மினி ட்ரக் மோதி விபத்து... 3 பேர் உயிரிழப்பு

கண்டெய்னர் லாரி மீது மினி ட்ரக் மோதி விபத்து... 3 பேர் உயிரிழப்பு

விபத்து

விபத்து

கண்டெய்னர் லாரி மீது மினி டிரக் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நாட்றம்பள்ளி அருகே நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மினி ட்ரக் பின்னால் மோதியதில்  வாகனத்தின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் அருகே பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று நின்றுகொண்டிருந்துள்ளது. அதன்  மீது கிருஷ்ணகிரியில் இருந்து வேலூர் நோக்கி சென்ற மினி ட்ரக் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

மேலும் மினி டிரக்கில் இருந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாட்றம்பள்ளி போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய  விசாரணையில் காட்பாடி கழிஞ்சூர் பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு எருதுவிடும் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் அங்கு இருந்து மாடுகளை ஏற்றிக் கொண்டு திரும்பிய போது  மினி டிரக் விபத்துக்கு உள்ளானது தெரியவந்தது.

மேலும் படிக்க: எலியை விரட்ட துரத்தி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

இதில் காட்பாடி கலைஞர் பகுதியை சேர்ந்த தீனா (வயது 22), மதன் மற்றும் நாகராஜ் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 4 பேருக்கும் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆட்டோவில் இருந்த இரண்டு மாடுகள் படுகாயம் அடைந்துள்ளது.  விபத்து தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர்: M.வெங்கடேசன்-  திருப்பத்தூர்

First published:

Tags: Accident, Thirupathur