முகப்பு /செய்தி /திருப்பத்தூர் / ஆம்பூரில் டாஸ்மாக் பாரில் கள்ளத்தனமாக மது விற்பனை.. வைரலான போட்டோவால் போலீசார் அதிர்ச்சி!

ஆம்பூரில் டாஸ்மாக் பாரில் கள்ளத்தனமாக மது விற்பனை.. வைரலான போட்டோவால் போலீசார் அதிர்ச்சி!

கள்ளத்தனமாக மது விற்பனை

கள்ளத்தனமாக மது விற்பனை

Thirupathur wine shop | திருவள்ளுவர் தினத்தையொட்டி மதுபான கடைகள் இயங்க கூடாது என ஆட்சியர் உத்தரவிட்டிருந்த நிலையில், ஆம்பூரில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Ambur | Tirupathur (Tiruppattur)

ஆம்பூரில் அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் பாரில் கள்ளத்தனமாக மதுபானங்களை விற்ற நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் திருவள்ளுவர் தினத்தையொட்டி மதுபான கடைகள் இயங்க கூடாது என ஆட்சியர் உத்தரவிட்டிருந்த நிலையில், ஆம்பூர் புறவழிச்சாலையில் இயங்கி வரும்  அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் பாரில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுவதாக வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில்  விரைந்து வந்த காவல் துறையினர் புறவழிச்சாலை பகுதியில் டாஸ்மாக் பாரில் மதுபானங்களை  விற்பனை செய்து கொண்டிருந்த  கார்த்திக் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த மதுபான பாட்டில்கள் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை  பறிமுதல் செய்து கார்த்திக்கை வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில்  கைது செய்து 1 மணி நேரத்திலேயே மதுபான பாட்டில்கள் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை  பார் உரிமையாளரான  கார்த்திக்கிடம் ஒப்படைத்து  கலால் காவல்துறையினர் அவரை  அனுப்பி வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கார்த்திக் கைதான  தகவல் புகைப்பட  ஆதாரங்களுடன் சமூக வலைதளங்களில் பரவியதால் காவல்துறையினர் செய்வதறியாத நிலையில் திகைத்த போலீசார்

மீண்டும் கார்த்திகை கைது செய்து காவல்துறையினர் கொடுத்து அனுப்பிய அனைத்து மதுபான பாட்டில்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: M.வெங்கடேசன், திருப்பத்தூர்.

First published:

Tags: Ambur, Thirupathur, Wine