ஹோம் /நியூஸ் /Tirupattur /

10 ரூபாய் நாணயம் செல்லாதா... திருப்பத்தூர் ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

10 ரூபாய் நாணயம் செல்லாதா... திருப்பத்தூர் ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

10 ரூபாய் நாணயம்

10 ரூபாய் நாணயம்

அனைவரும் இனிவரும் காலங்களில் 10 ரூபாய் நாணயத்தை அனைத்து இடங்களிலும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

10 ரூபாய் நாணயங்களை பல்வேறு இடங்களில் வாங்க மறுக்கும் நிகழ்வுகள் நடந்துவரும் நிலையில், இது தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

10 ரூபாய் நாணயங்கள் மத்திய ரிசர்வ் வங்கி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் புழகத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து 20 ரூபாய் நாணயமும் அறிமுகப்பட்டன.  எனினும், 10 ரூபாய் தாள் அளவுக்கு 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதற்கு பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. தமிழகத்தை பொருத்தவரை சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயங்களை பரவலாக யாரும் வாங்குவதில்லை.

10 ரூபாய் நாணயம் செல்லாது என அவ்வப்போது வதந்திகளும் பரவுவது. பின்னர், இது தொடர்பாக ரிசர்வ் வங்கி விளக்கம் அளிக்கும். 10 ரூபாய் நாணயம் செல்லும் என்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த அவ்வபோது நூதன சம்பவங்களும் நடப்பதுண்டு. அண்மையில் ஒருவர் 10 ரூபாய் நாணயங்களாக 6 லட்சம் ரூபாய்க்கு கார் வாங்கியது பலரையும் வியப்படைய செய்தது.

ஆனாலும், 10 ரூபாய் நாணயத்தை வாங்குவதற்கான தயக்கம் இருந்துகொண்டே தான் உள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்  அமர்குஷ்வாஹா வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்கள் பேருந்துகளில் பயணிக்கும்போது மற்றும் அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பொருட்கள் வாங்குகின்ற போதும் பொதுமக்களிடம் உள்ள 10 ரூபாய் நாணயத்தை கொடுப்பதாக இருந்தாலும் அல்லது மற்றவர்களிடமிருந்து நாம் பெறுவதாக இருந்தாலும் அவசியம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இதையும் படிக்க: மரத்தடியில் வகுப்பறை..மழை வந்தால் புத்தகத்தை குடையாய் பயன்படுத்தும் மாணாக்கர்கள்..திருவாரூர் அரசு பள்ளியின் அவலநிலை..

அனைவரும் இனிவரும் காலங்களில் 10 ரூபாய் நாணயத்தை அனைத்து இடங்களிலும் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயம் தொடர்ந்து அனைத்து இடங்களிலும் செல்லத்தக்கதாகும் ‘ என தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Ten rupees coin, Thirupathur