ஹோம் /நியூஸ் /Tirupattur /

மின் கம்பங்களை அகற்றாமல் கால்வாய் அமைப்பு.. வேலூரை தொடர்ந்து ஆம்பூரிலும் சர்ச்சை

மின் கம்பங்களை அகற்றாமல் கால்வாய் அமைப்பு.. வேலூரை தொடர்ந்து ஆம்பூரிலும் சர்ச்சை

கம்பத்துடன் கால்வாய் அமைப்பு

கம்பத்துடன் கால்வாய் அமைப்பு

ல் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படும் போது தெருவில் இருந்த மின்சார சிமென்ட் தூண்களுடன் (கம்பங்கள்) சேர்த்து கால்வாய் தளம்  அமைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் மின்சார சிமென்ட்  (கம்பங்கள்) கால்வாய் மாற்றி அமைக்காமல் கால்வாயின் நடுவே கட்டிய ஒப்பந்தாரர், மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாநகராட்சி சீர்மிகு நகராக (ஸ்மார்ட் சிட்டி) தேர்வு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வேலூர் மெயின் பஜார் தெரு அருகே காளிகாம்மாள் தெருவில் அண்மையில் இருசக்கர வாகனத்தோடு  சாலை போடப்பட்டு இருந்தது.  பின்னர், , 2 மணி நேரம் போராடி, சிமென்ட் கலவையை உடைத்து பைக்கை எடுத்தனர். மேலும், ஒப்பந்ததாரர் உடனான  ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது.

தற்போது அதேபோன்ற சம்பவம் ஒன்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்றுள்ளது. ஆம்பூர் நகராட்சி  35வது வார்டிற்குட்டப்பட்ட பகுதிகளில்  ஆம்பூர் நகராட்சி சார்பில்  கால்வாய் அமைக்கும் பணி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் 50 லட்சம் ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது.  மழை நீர் வடிகால்வாயுடன் கூடிய சிமென்ட் கான்கிரீட் தளம் 539.00 மீட்டர் அளவிற்கு    அமைக்கும் பணி  நடைப்பெற்று வருகிறது.

மேலும் படிக்க:  35 மாணவர்களுக்கு 9 ஆசிரியர்கள்.. மாதம் ரூ.12 லட்சம் ஊதியம் வழங்கிவரும் தமிழக அரசு

  இந்நிலையில் பெத்தலேகம் 4 ஆவது தெருவில் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படும் போது தெருவில் இருந்த மின்சார சிமென்ட் தூண்களுடன் (கம்பங்கள்) சேர்த்து கால்வாய் தளம்  அமைக்கப்பட்டுள்ளது. கால்வாய்க்குள் தூண்கள் இருப்பதால் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஓப்பந்ததாரர்கள் தொடர்ந்து அஜாக்கிரத்தையாக பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அரசு கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர்: வெங்கடேசன் - திருப்பத்தூர்

First published:

Tags: Arani, Thirupathur