ஹோம் /நியூஸ் /திருப்பத்தூர் /

நீட் தேர்வு பயிற்சி மையத்தின் மாடியில் இருந்து குதித்து பள்ளி சிறுமி தற்கொலை முயற்சி!

நீட் தேர்வு பயிற்சி மையத்தின் மாடியில் இருந்து குதித்து பள்ளி சிறுமி தற்கொலை முயற்சி!

மாணவி தற்கொலைக்கு முயன்ற இடம்

மாணவி தற்கொலைக்கு முயன்ற இடம்

படுகாயமடைந்த மாணவி ஆபத்தான நிலையில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் நீட் தேர்வு பயிற்சி மையத்தின் மாடியில் இருந்து குதித்து பள்ளி சிறுமி தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே காமராஜர் சாலையில் தனியார் நீட் தேர்வு மற்றும் போட்டி தேர்வு பயிற்சி மையம் இருக்கிறது. இந்த பயிற்சி மையமானது மூன்றாவது மாடியில் அமைந்திருக்கிறது. இந்த கட்டிடத்தில் பணிகள் நிறைவடையாமல் ஜன்னல் அமைக்கப்படாமல் உள்ளது.  இதில் 20க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பல்வேறு போட்டி தேர்வுகளுக்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இங்கு 2 மாதமாக பயின்று வரும் 17 வயது  மாணவியின் தந்தை  பயிற்சி மையத்துக்கு வந்திருக்கிறார். தந்தையுடன் பேசிக்கொண்டிருந்த மாணவி,  திடீரென மூன்றாவது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக குதித்து இருக்கிறார். இதில் அவருக்கு இடுப்பு மற்றும் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.

Read More : வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுமி பலி.. தவறான சிகிச்சை காரணமா?

வலியில் அவர் அலறி துடித்து இருக்கிறார். தந்தை சம்பவ இடத்தில் மாணவியை மடியில் போட்டுக் கொண்டு அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது. காதல் விவகாரத்தினை அறிந்து தந்தை கண்டித்ததால் மாணவி  தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

படுகாயமடைந்த மாணவி ஆபத்தான நிலையில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Commit suicide, Tiruppur