முகப்பு /செய்தி /திருப்பத்தூர் / வெளுத்துவாங்கும் கனமழை: திருப்பத்தூரில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

வெளுத்துவாங்கும் கனமழை: திருப்பத்தூரில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

மாதிரி படம்

மாதிரி படம்

கனமழை எதிரொலியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக  மாவட்ட ஆட்சியர்அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirupattur, India

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பத்தூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக  இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை  மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக  மாவட்ட ஆட்சித் தலைவர் அமர் குஷ்வாஹா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று செவ்வாய்க்கிழமை (11-ம் தேதி) ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக  தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Heavy rain, School Leave