ஹோம் /நியூஸ் /திருப்பத்தூர் /

மின்கட்டணமாக பெற்ற பணத்துக்கு ரசீது கொடுக்காமல் கையாடல் செய்த மின்வாரிய ஊழியர் சஸ்பெண்ட்..

மின்கட்டணமாக பெற்ற பணத்துக்கு ரசீது கொடுக்காமல் கையாடல் செய்த மின்வாரிய ஊழியர் சஸ்பெண்ட்..

Tirupathur | நாட்றம்பள்ளி அருகே மின்வாரிய அலுவலகத்தில் மின்கட்டணம் செலுத்திய பொது மக்களுக்கு வருவாய் மேற்பார்வையாளர்  முறையான ரசீது வழங்கவில்லை. இதனை அறிந்த மின் வாரிய செயற்பொறியாளர் அவரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.  

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirupathur (Tiruppattur), India

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்பட்டி பகுதியில் இயங்கி வரும் துணை மின்நிலையத்தில் மின்கட்டணம் வசூலிக்கும் பிரிவில் வருவாய் மேற்பார்வையாளராக  வெங்கடேசன் என்பவர் பணியாற்றி வருகிறார்.  இவரிடம் காவேரிப்பட்டு பகுதி  பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்த வந்த போது கணினியில் தொழிற்நுட்ப கோளாறு என கூறி மின்கட்டணம் செலுத்திய ரசீதை பொதுமக்களுக்கு வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இந்நிலையில் காவேரிப்பட்டு பகுதியில் மின்வாரிய ஊழியர்கள் மின்கட்டணம் செலுத்தாத வீட்டிற்கு மின் இணைப்பை துண்டிக்க சென்றபோது, அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உரிய பணம் செலுத்தியதாகவும் ஆனால் முறையான ரசீது வழங்கவில்லையென மின்வாரிய ஊழியர்களிடம் தெரிவித்தனர். ஆனால் ஊழியர்கள் பொதுமக்களின் வீடுகளில் மின் இணைப்பை துண்டித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இதுகுறித்து காவேரிப்பட்டு பொதுமக்கள் வாணியாம்பாடி மின்வாரிய செயற்பொறியாளர் பாஷா முகமதுவிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில்  கேத்தாண்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் வாணியம்பாடி  மின்வாரிய செயற்பொறியாளர் பாஷா அகமது ஆய்வு மேற்கொண்டார்.

Also see... வேலை வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் மோசடி செய்த கணவன் - மனைவி கைது

அப்போது வெங்கடேசன் என்பவர் பொதுமக்கள் செலுத்தும் மின் கட்டணத்திற்கு உரிய ரசீது வழங்காமல்  11, 000ரூபாய் கையாடல் செய்தது தெரியவந்தது.  இந்நிலையில் உடனடியாக வெங்கடேசனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யது  வாணியம்பாடி செயற்பொறியாளர் பாஷா முகமது உத்தரவிட்டார் மேலும் வெங்கடேசனிடம் விசாரணை நடைப்பெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: M.வெங்கடேசன், திருப்பத்தூர் 

First published:

Tags: Tirupattur, TNEB