ஹோம் /நியூஸ் /திருப்பத்தூர் /

அரசுக்கு ரூ.9 லட்சம் இழப்பீடு ஏற்படுத்திய ஊராட்சிமன்ற தலைவர் : திருப்பத்தூர் ஆட்சியர் அதிரடி உத்தரவு

அரசுக்கு ரூ.9 லட்சம் இழப்பீடு ஏற்படுத்திய ஊராட்சிமன்ற தலைவர் : திருப்பத்தூர் ஆட்சியர் அதிரடி உத்தரவு

 ஊராட்சி மன்ற தலைவர் அவரது கணவர்

ஊராட்சி மன்ற தலைவர் அவரது கணவர்

ஆம்பூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரை வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும், காசோலையில் கையெழுத்திடவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Ambur, India

  திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியத்திற்குட்பட்ட வீராங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் திவ்யா ஜானகிராமன். இவரது கணவர் ஜானகிராமன் என்பவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமர்ந்து ஊராட்சி மன்ற பணிகளை மேற்கொள்வதாக ஏற்கனவே பலமுறை புகார் எழுந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு அரசின் அனுமதியில்லாமல் தன்னிச்சையாக வீராங்குப்பம் ஊராட்சி மன்றத்திற்கு சொந்தமான கட்டிடம் ஒன்றை இடித்துள்ளார்.

  இதனால் அரசுக்கு 9 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டதாக இவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஒன்றிய குழு தலைவர் சுரேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள் புகார் அளித்திருந்தனர்.

  இதன் அடிப்படையில் வீராங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா ஜானகிராமன் ஊராட்சி மன்றம் தொடர்பான வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும், காசோலைகளில் கையெழுத்திடவும் தடை விதித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாகா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  Also see...புதுச்சேரியில் ஹெலிகாப்டர் சேவை.. இரவிலும் விமான சேவை: தமிழிசை

  மேலும் வீராங்குப்பம் ஊராட்சி மன்றம் தொடர்பான வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரன் என்பவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  செய்தியாளர்:  வெங்கடேசன்,திருப்பத்தூர் 

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Ambur, Bank, Thirupathur