திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிய ஆட்சியர் கட்டிடம் மற்றும் 16,820 பயனாளிகளுக்கு, 103 கோடியே 42 லட்சத்தி 51 ஆயிரத்தி 441 ரூபாய் மதிப்பில் நலதிட்டங்களை வழங்கினார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
புதியதாக பிரிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ. 110 கோடி நிதியில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகம் மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க இன்று திருப்பத்தூருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்தார்.
ஆட்சியர் அலுவலகத்தை திறந்து ரிப்பன் வெட்டி முதலமைச்சர் திறந்துவைத்தார். முன்னதாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் சிறிது நேரம் அமர்ந்தார். அத்துடன், புதிய ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றை நட்டார்.
அதன் பிறகு, திருப்பத்தூர் தனியார் பள்ளி வளாகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்த விழா மேடைக்கு வந்தார். அங்கே நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாவில் பேருரையயாற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது அவர் பேசுகையில், நீண்ட வரலாறு பெருமை கொண்டது 1,500 ஆண்டு பழமையான சோழ, விஜயநகர, ஹாய்சாய்கள் ஆண்டது பகுதி திருப்பத்தூர்.
16-ம் நூற்றாண்டில் திருவனபுரம் என பெயர் மாறி தற்போது திருப்பத்தூர் ஆகியுள்ளது. 10 புனிதமான ஊர்கள் இருந்ததால் திருப்பத்தூர் என்றும் அழைக்கப்படுகிறது. ஜவ்வாது மலை தொடர்களை கொண்ட, ஏலகிரி மலையை கொண்ட இயற்க்கை சூழலில் அமைந்துள்ளது திருப்பத்தூர் மாவட்டம்.
இம்மாவட்டத்தில் 1,703 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. 1,741 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளன. 85 லட்சம் மகளில் இலவச பேருந்து பயனம் மேற்கொண்டுள்ளனர். 20,518 பேரின் கூட்டுறவு நகைகடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 5 லட்சம் பேர் மக்களை தேடி மருத்துவம் மூலம் பயன்படுத்துள்ளார்கள்.
ஏலகிரி மலையில் சாகச சுற்றுலா தளம் 2 கோடி 98 லட்சத்தில் ஏற்படுத்தப்படும் எனவும், ஆண்டியப்பனூரில் படகு குளாம். ஆம்பூர் ஊட்டல் சரஸ்வதி கோயில் மேம்பாடு செய்யப்படும் என்றும், ஏலகிரி ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்படும் எனவும், நாட்றம்பள்ளியில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டார்.
விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரம் மேம்பட அனைவருக்கும் வழிகாட்டும் அரசாக திமுக உள்ளது என்று கூறிய முதலமைச்சர், தற்போது உள்ள நவீன தமிழ்நாடு கலைஞரால் உருவாக்கப்பட்டது என்றார். மேலும், நமது திட்டங்கள் இந்தியா முழுமைக்கும் அவசியமானது என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மாநிலத்தின் முதல்வர் என்பதால் மாவட்டங்களை நான் மறந்துவிடவில்லை. அனைத்து மாவட்டத்தின் வளர்ச்சியை நான் முக்கியமானதாக நினைக்கிறேன். ஒவ்வொரு தனி மனிதனின் கோரிக்கையையும் நிறைவேற்றி வருகிறேன். இது தான் திராவிட மாடல் ஆட்சியின் இலக்கனம் என்றார். உங்கள் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். படித்து முடித்தவர்கள் வேலை தேடத்தான் நான் முதல்வன் திட்டத்தை தொடக்கி வைத்துள்ளேன்.
தமிழகத்தை முன்னேற்றவே எனது சக்தியை மீறி செயல்பட்டு வருகிறேன். எனது உடல் சோர்வையும் பொருட்படுத்தாமல் உழைத்து வருகிறேன். மக்களின் முகத்தை பார்த்தால் மாத்திரைகளை தேவையில்லை. நான் மட்டும் அல்ல அமைச்சர்கள், அதிகாரிகளும் தன் சக்தியை மீறி உழைத்து இந்தியாவிற்கு முன்மாதிரியான ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
Must Read : மூன்றாம் பாலினத்தவர்கள் MBC வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர் - நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
இந்த விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, மற்றும் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா மற்றும் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: M.வெங்கடேசன், திருப்பத்தூர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, MK Stalin, Thirupathur