திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 7 நாட்களாக குறவர் இன மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் முட்டி போட்டு போராட்டம், தர்ணா போராட்டம், பட்டினி போராட்டம், ஒப்பாரி போராட்டம் என பலகட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து குறவர் இன மக்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “பாஜகவும், சீமானும் தான் வடமாநிலத்தவர்கள் பிரச்சனைக்கு காரணம் என கே.எஸ்.அழகிரி கூறியது அவர் அரவேக்காடு என்பதை நிரூப்பிக்கிறது. ராகுல் காந்தியை என்னிடம் பேச சொல்லுங்கள். முதலில் மற்ற மாநிலங்களில் தமிழர்கள் பாதுகாப்பாக வாழ்கின்றனரா? என ஓர் குழு அமைத்து ஆய்வு செய்யுங்கள்.
மேலும், குறவர் இன மக்களுக்கு இவ்வளவு காலம் குடி சான்றிதழ் கொடுக்காமல் ஆதி குடிகளாக வைத்துள்ளனர். இதனால் இந்த சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுத முடியவில்லை. எழுதினாலும் வேலை கிடைக்கவில்லை. தற்போது பள்ளிக்கு சென்று படிக்காமல் குழந்தைகள் வீதியில் 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு இதனை கவனத்தில் எடுத்து உடனடியாக தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.
இதையும் படிங்க : பா.ஜ.கவிலிருந்து விலகிய சி.டி.ஆர்.நிர்மல் குமார்- அண்ணாமலை கொடுத்த இரு வரி பதில்
இல்லையொன்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும் இவர்கள் எளிய குடிகள் என்பதால் அதிகாரிகள் மெத்தனம் காட்டி சான்றிதழ்கள் வழங்கவில்லை. இதுவே அமைச்சர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தால் வேலை நடக்கும். எளிய மக்களின் குரல் ஒலிக்கவில்லை. இப்போது தான் நாங்கள் வந்துள்ளோம். இது ஒரு நொடியில் தீர்க்க வேண்டிய பிரச்சனை” என தெரிவித்தார்.
முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டிருக்க கூடிய குறவர் இன மக்கள் கூடைகளை நெய்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த குறவர் இன மக்களை சந்திக்க வரும்போது நாம் தமிழர் கட்சியினர் ஒருவர் பின் ஒருவராக மோதி கீழே விழுந்து எழுந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : வெங்கடேசன் திருப்பத்தூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress, K.S.Alagiri, Seeman, Thirupathur