ஹோம் /நியூஸ் /திருப்பத்தூர் /

மனைவியின் சகோதரிக்கு வசிய மருந்து கொடுத்து காதல்வலையில் விழவைக்க முயன்ற இளைஞர்... வாணியம்பாடியில் பரபரப்பு

மனைவியின் சகோதரிக்கு வசிய மருந்து கொடுத்து காதல்வலையில் விழவைக்க முயன்ற இளைஞர்... வாணியம்பாடியில் பரபரப்பு

வாணியம்பாடி கிரைம் நியூஸ்

வாணியம்பாடி கிரைம் நியூஸ்

வாணியம்பாடி அருகே மனைவி பிரிந்து வெளிநாடு  சென்றதால் மனைவியின் சகோதரியை வசிய மருந்து ஊற்றி  காதல் வலையில் சிக்க வைக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirupattur | Vaniyambadi

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் ராஜேஷ் (வயது 23). இவர் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம் படித்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த செவிலியரான தேன்மொழி (வயது 22) என்பவரை ஒன்றரை வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 மாதத்திற்கு முன்பு கணவனை பிரிந்து வசித்து வந்த தேன்மொழி செவிலியர் பணிக்காக வெளிநாடு சென்றுள்ளார்.

இந்நிலையில் ராஜேஷ் அவரது மனைவி தேன்மொழியின் சகோதரியான தமிழ் மொழியை காதல் வலையில் சிக்க வைக்க பலமுறை அவரிடம் பேசி உள்ளார். இருந்தபோதிலும் அவர் மறுத்ததால் கடந்த புதன்கிழமை அன்று பூங்குளம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது ராஜேஷ் கையில் மறைத்து வைத்திருந்த திரவியத்தை தமிழ் மொழி மீது ஊற்றி உள்ளார்.

உடனடியாக தமிழ் மொழி என் மீது ஏதோ ஊற்றி விட்டார் என கூச்சலிட்டு கதறி உள்ளார். உடனடியாக அங்கிருந்து கிராம மக்கள் ஒன்று கூடி அமிலம்  (ACID) இருக்கக்கூடும் என ஆலங்காயம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ் மொழியை  சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பின்னர் பரிசோதித்த மருத்துவர்கள் இது அமிலம் அல்ல  எண்ணெய் போன்று திரவியம் என்று தெரிவித்தனர். அதை தொடர்ந்து தமிழ் மொழி ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

Also see... பெண் கல்வி ஏன் அவசியம்..? அதன் முக்கியத்துவத்தை விளக்கும் சத்குரு

புகாரின் அடிப்படையில் ராஜேஷ் என்பவரை கைது செய்த ஆலங்காயம் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததால் மனைவியின் சகோதரியை காதல் வலையில் சிக்க வைக்க வசிய மருந்து ஊற்றியதாக ஒப்புகொண்டார். அதன் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர்: M.வெங்கடேசன்,திருப்பத்தூர் 

First published:

Tags: Crime News, Tirupattur, Vellore