முகப்பு /செய்தி /திருப்பத்தூர் / கேஜிஎஃப்யில் கொலை.. திருப்பத்தூரில் தலைமறைவு வாழ்க்கை.. இளைஞர் சிக்கியது எப்படி?

கேஜிஎஃப்யில் கொலை.. திருப்பத்தூரில் தலைமறைவு வாழ்க்கை.. இளைஞர் சிக்கியது எப்படி?

கைது செய்யப்பட்டவர்

கைது செய்யப்பட்டவர்

Thirupathur arrest | கர்நாடகாவில் கொலை செய்து விட்டு திருப்பத்தூரில் தலைமறைவான கொலையாளி நண்பர்களுடன் சேர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirupathur (Tiruppattur), India

கர்நாடகாவில் கொலை செய்துவிட்டு தலைமறைவாக திருப்பத்தூரில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்து வந்த கொலை குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் கேஜிஎஃப் பகுதியைச் சேர்ந்த ஜீவா என்பவருடைய மகன் விஜய் வர்மன் என்கிற சினோஜ் (29). இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி மற்றும் திருட்டு வழக்குகள் என 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி கேஜிஃஎப் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர் விக்கி மற்றும் சினோஜ் ஆகிய இருவரும் கஞ்சா போதையில் இருந்து உள்ளன. இந்த நிலையில் கஞ்சா போதையில் விக்கியை சினோஜ் வெட்டி கொலை செய்துவிட்டு  திருப்பத்தூரில் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் திருப்பத்தூர் அடுத்த காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் மகன்கள் உலகநாதன் (29) மற்றும் மோகன் (26) இருவரும் சினோஜிக்கு நண்பர்களாக உள்ளனர். இதன் காரணமாக கர்நாடகாவில் கொலை செய்துவிட்டு திருப்பத்தூருக்கு தப்பி வந்து தலைமறைவாக இருந்த நிலையில் உலகநாதன் மற்றும் மோகன் ஆகிய இருவருடன் சேர்ந்து செப்டிக் டேங்க் கிளீன் செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும் அவ்வப்போது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். சினோஜ், உலகநாதன், மோகன் ஆகிய மூன்று பேரும் திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் வீட்டை உடைத்து திருடி கொண்டு வந்த போது ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த திருப்பத்தூர் கிராமிய காவல் உதவி ஆய்வாளர் அகிலன் மற்றும் போலீசார் சந்தேகத்தின் வகையில் மூவரையும் பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளனர்.

அதன் காரணமாக காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரிக்கையில் சினோஜ் மீது பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கர்நாடக கேஜிஎஃப் போலீசாரை திருப்பத்தூருக்கு வரவழைத்து சினோஜ் என்பவரை ஒப்படைத்தனர். மேலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட உலகநாதன் மற்றும் மோகன் இருவரையும் திருட்டு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர்: M.வெங்கடேசன், திருப்பத்தூர்.

First published:

Tags: Arrest, Local News, Murder, Thirupathur