ஹோம் /நியூஸ் /திருப்பத்தூர் /

“சாரி மாமா.. என் காதல் உனக்கு தெரியலை” - காதலில் மோதல் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு - திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம்

“சாரி மாமா.. என் காதல் உனக்கு தெரியலை” - காதலில் மோதல் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு - திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம்

தற்கொலை செய்துகொண்ட சரண்யா

தற்கொலை செய்துகொண்ட சரண்யா

நாட்றம்பள்ளியில் காதலனுடன் ஏற்பட்ட மோதலால் இளம்பெண் குளிர்பானத்தில் எலி மருந்து கலந்துக் குடிக்கும் போது எடுத்த, வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி கருணாநிதி தெருவை சேர்ந்தவர்  மனோன்மணி. கணவர் உயிரிழந்த நிலையில் இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார்.  முதல் மகள் திருமணமாகி கணவனுடன் வசித்து வருகிறார்.  இளைய மகள் சரண்யா (வயது 23 ) இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார்  கலை கல்லூரியில் எம்.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தது தாயார் கண்டித்ததால் சரண்யா கடந்த 11 ம் தேதி எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து தகவல் அறித்து சரண்யாவை சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதித்தனர். இந்நிலையில்  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

இதுகுறித்து சரண்யா சகோதரி கார்த்திகா கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.மேலும் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரண்யா புதுப்பேட்டை அருகே உள்ள அன்சாகரம் பகுதியை சேர்ந்த ராணுவ வீரரான அருண் என்பவரை காதலித்து வந்துள்ளார். கடந்த 3 வருடங்களாக இவர்கள் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அருண் சரண்யாவிடம் பேசவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கள்ளக்குறிச்சியில் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை - தாளாளர் கைது

இந்நிலையில் கடந்த 11 ம் தேதி  வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை செல்போன் மூலம் தனது சகோதரி கார்த்திகாவுக்கு தெரிவித்துள்ளார்.  கார்த்திகா அளித்த தகவலின் பேரில் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு  சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மற்றும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் கடந்த 23 ம் தேதி சிகிச்சை பலனின்றி சரண்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சகோதரி கார்த்திகா கொடுத்த புகாரின் பேரில் நாட்றம்பள்ளி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில்  சரண்யா குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து குடித்து கொண்டு அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து தனது காதலனுக்கு அனுப்பி உள்ளார் என்பது  தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: நடிகைகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் : தி.மு.க பேச்சாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

மேலும் வீடியோவில் ”சாரி மாமா நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திவிட்டேன் நினைக்கிறேன், நான் கண்டிப்பா வரமாட்டேன் அவ்வளவுதான் போய் சேர்ந்துவிடுவேன். நல்லபடியா சந்தோஷமாக இரு மாமா என் அம்மாவை பார்த்துக்கோ.

நான் உன்னை எவ்வளவு லவ் பண்ணேன் என்பது உனக்கு புரிய வைத்தேன் உனக்கு புரியாமல் உன் பாட்டுக்கு பேசிட்ட. நான் எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். நல்லபடியா சந்தோஷமாக இரு நான் இனிமேல் உன் லைப் கிடையாது அவ்வளவு தான் நான் போய் சேர்ந்துவிடுவேன்.” எனப் பேசி அந்த வீடியோவை  காதலனுக்கு அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக நாட்றம்பள்ளி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: வெங்கடேசன்

First published:

Tags: Crime News, Sucide, Thirupathur, Viral Video