Home /News /tirupattur /

மாமியார் மருமகள் சண்டை தீரும்.. தங்கம் இரட்டிப்பாகும் - மாந்திரீகம் செய்வதாக கூறி நகைகளுடன் ஓட்டம் பிடித்த ஆசாமி

மாமியார் மருமகள் சண்டை தீரும்.. தங்கம் இரட்டிப்பாகும் - மாந்திரீகம் செய்வதாக கூறி நகைகளுடன் ஓட்டம் பிடித்த ஆசாமி

ஆசைகாட்டி நகையை அபேஸ் செய்த இளைஞர்

ஆசைகாட்டி நகையை அபேஸ் செய்த இளைஞர்

Tirupattur district News: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மாமியார்-மருமகள் சண்டைகள்  தீரும், தங்க நகை இரட்டிப்பாக கிடைக்கும் என மாந்திரீகம் செய்து தருவதாக இளைஞர் ஒருவர் கூறி 4 சவரன் தங்க நகையை ஏமாற்றி தப்பிசென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirupattur, India
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கெங்காபுரம் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று காலை வந்த இளைஞர் அப்பகுதியில் உள்ள பெண்களிடம் மாமியார்-மருமகள் சண்டைகள்  தீர, நகைகள் இருட்டிப்பாக கிடைக்க மாந்திரீகம் செய்து தருவதாக கூறி வீட்டில் உள்ள  தங்கநகையை கொண்டு வரும் படி கூறியுள்ளார்.

    இந்த ஆசை வார்த்தைகளை நம்பி, அப்பகுதியை சேர்ந்த கவிதா என்ற பெண், தன்னிடம் இருந்த 4 சவரன் தங்க நகையை அந்த இளைஞரிடம் மாந்தீரீகம் செய்து இரட்டிப்பாக்கித் தரும்படி கூறி கொடுத்துள்ளார்.

    நகையை வாங்கிய அந்த இளைஞர், சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, பின்னர் சுற்றிலும் நோட்டமிட்டுவிட்டு, அந்த 4 சவரன் தங்கநகையை  ஏமாற்றி எடுத்துக்கொண்டு, அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை அந்த பெண் அறிந்து கதறி அழுதுள்ளார்.

    இதுகுறித்து அந்த பெண் ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அப்பகுதியில உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு மாந்தீரீகம் செய்வதாக கூறி ஏமாற்றி  தங்கநகையை எடுத்து சென்ற இளைஞரை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பல்வேறு உத்திகளை கையாண்டு, இனிக்க இனிக்க பேசி மக்களை ஏமாற்றி நகை, பணம் உள்ளிட்டவற்றை மோசடி செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது. காவல்துறையினர் பல்வேறு வகைகளில் எச்சரிக்கை விடுத்தும், விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வரும் நிலையில், இது போன்ற மோசடி நடப்பதும் மக்கள் அவர்களை நம்பி ஏமாறுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

    Must Read : செல்போன் கேம்: தாய் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை - வேதாரண்யம் அருகே சோகம்

     

    செய்தியாளர் - எம்.வெங்கடேசன்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Crime News, Gold Theft, Tirupattur

    அடுத்த செய்தி