Home /News /tirupattur /

திருப்பத்தூரில் கஞ்சா போதையில் சிறுவன் ரகளை! மரத்தில் கட்டிவைத்து அடித்த பொதுமக்கள்!

திருப்பத்தூரில் கஞ்சா போதையில் சிறுவன் ரகளை! மரத்தில் கட்டிவைத்து அடித்த பொதுமக்கள்!

கஞ்சா போதையில் சிறுவன் ரகளை

கஞ்சா போதையில் சிறுவன் ரகளை

திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிக அளவில் கிராமப் பகுதிகளில் கஞ்சா விற்பதாகவும் இதனால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    காவல் நிலையம் முன்பு கஞ்சா போதையில் ஆட்டம் போட்ட சிறுவனை பொதுமக்கள் மரத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்துள்ள சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்திலி காவல் நிலையம் முன்பு கஞ்சா போதையில் 16 வயது சிறுவன் ஒருவர் சாலையில் வரும் இருசக்கர வாகனங்களை வழி மறித்து ரகளையில் ஈடுபட்டு வந்தார். இதனை அப்பகுதியில் உள்ள சிலர் தங்களது தொலைபேசியில் படம் எடுத்தனர். மேலும் தொடர்ந்து ரகளையில்  ஈடுபட்ட அந்த சிறுவனை பிடித்து அப்பகுதி மக்கள் மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். கந்திலி காவல் நிலையம் முன்பே இச்சம்பவம் நடைபெற்றதால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    அதனுடைய வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிக அளவில் கிராமப் பகுதிகளில் கஞ்சா விற்பதாகவும் இதனால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே தமிழக அரசு இதன் மீது கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை  எழுந்துள்ளது.

    செய்தியாளர்: M.வெங்கடேசன்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Ganja, Tirupattur

    அடுத்த செய்தி