ஹோம் /நியூஸ் /திருப்பத்தூர் /

ஆம்பூர் காலணி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

ஆம்பூர் காலணி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

தீ விபத்து

தீ விபத்து

Tirupathur | ஆம்பூர் அருகே, காலணி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tirupathur (Tiruppattur), India

  ஆம்பூர் அருகே காலணி தொழிற்சாலையில்  உதிரி பாகங்கள் வைத்திருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.

  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்ன வரிகம் பகுதியில் இயங்கி வரும் பரிதா குழுமத்திற்கு சொந்தமான தனியார் காலனி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் 2000க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

  இந்நிலையில் நேற்று பணி முடிந்து அனைத்து தொழிலாளர்களும் வீடு திரும்பி உள்ளனர். அப்போது சரியாக இரவு 7 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமள வென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வைக்கப்பட்ட  உதிரி பாகங்கள் எரிந்து நாசமானது.

  இந்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த ஆம்பூர் தீயணைப்பு வீரரக்ள் தீயை அணைக்க போராடினர். இருந்த போதிலும் தீயை கட்டுக்குள் கொண்டு வராத நிலையில் உடனடியாக திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் இருந்து 18 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.

  Also see... அதிர்ச்சி: டாஸ்மாக் மதுபானத்தில் இறந்து மிதந்த புழு!

  அவர்கள் தண்ணீரை பீச்சியடித்து 11 மணி நேரத்திற்கு மேலாக போராடி  தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் தீ கட்டுக்குள் கொண்டு வந்தாலும் கூட இன்னும் முழுமையாக தீயை அணைக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பாக உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  செய்தியாளர்: M.வெங்கடேசன், திருப்பத்தூர் 

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Fire accident, Thiruppur