Home /News /tirupattur /

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியத்தால் இரட்டை குழந்தைகள் உயிரிழந்ததாக தந்தை வேதனை

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியத்தால் இரட்டை குழந்தைகள் உயிரிழந்ததாக தந்தை வேதனை

குழந்தை உயிரிழப்பு

குழந்தை உயிரிழப்பு

மருந்து, மாத்திரைகள் 30000 ரூபாய் வரை வாங்கிக் கொடுத்தும் இரட்டை பெண் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்ததாக குழந்தைகளின் தந்தை திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirupattur, India
    திருப்பத்தூர் மாவட்டம்  செலந்தம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அருண். இவருக்கு வயது 28. இவர் மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு புவனேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி தற்போது தான் ஒரே பிரசவத்தில் கடந்த மாதம் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.

    இந்த நிலையில் குழந்தையின் எடை குறைவாக உள்ளது என்ற காரணத்தால் ஒரு மாத காலமாக மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்ததுள்ளனர். ஆனால் மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை இறந்து உள்ளது. அதனைத் தொடர்ந்து அருண் 30,000 ரூபாய் மதிப்பிலான மருந்து மாத்திரைகளை திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு குழந்தையை காப்பாற்ற வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதில் நேற்று கூட குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை நலமாக உள்ளது என கூறியுள்ளனர். ஆனால் நேற்று இரவு திடீரென குழந்தை இறந்து விட்டதாக கூறியதால் அதிர்ச்சி அடைந்த அருண் மற்றும் அவருடைய மனைவி திருப்பத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுத்த காட்சி காண்போர் நெஞ்சை கலங்க வைத்தது.

    Also see...பல்லாவரம் அருகே ஆசிரியர் திட்டியதால் பள்ளி மாணவி தற்கொலை..!

    குழந்தையின் அம்மா


     மேலும் இதுகுறித்து குழந்தையின் தந்தையான அருண் 30,000 அளவிலான மருந்து மாத்திரைகளை வாங்கி கொடுத்தும் என் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. அதற்கு நான் தனியார் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று இருப்பேன் எனவும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது போன்ற சம்பவம் வேறு யாருக்கும் நடக்க கூடாது என அவர் கூறினார்.


    செய்தியாளர்: M.வெங்கடேசன்,திருப்பத்தூர்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Crime News, Government doctors, Tirupattur

    அடுத்த செய்தி