முகப்பு /செய்தி /திருப்பத்தூர் / 90% நிலத்தை கையகப்படுத்திய பின்னரே பாலம் மற்றும் சாலைப் பணிகள் தொடக்கம்.. அமைச்சர் எ.வ.வேலு

90% நிலத்தை கையகப்படுத்திய பின்னரே பாலம் மற்றும் சாலைப் பணிகள் தொடக்கம்.. அமைச்சர் எ.வ.வேலு

அமைச்சர் ஏ.வ.வேலு

அமைச்சர் ஏ.வ.வேலு

E. V. Velu Minister of Public Works for Tamil Nadu | ஆம்பூர் - வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை குறைக்க விரைவில் இதுகுறித்து ஆய்வு கூட்டம் நடத்த உள்ளோம் என அமைச்சர் பேச்சு

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ambur, India

90 சதவிகித நிலத்தை கையகப்படுத்திய பின்னர் தான் பாலம் மற்றும் சாலை அமைக்கும் பணியை செய்து வருகிறோம் என பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு  தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கண்ணாடிகுப்பம் பகுதியில் ரூ.25 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பால கட்டுமான பணியை  தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஏ.வ.வேலு, கடந்த பத்து ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கெர்ணாடிகுப்பம் ரயில்வே மேம்பால பணியை அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் கட்டி முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம் என கூறினார்.

மேலும் வாணியம்பாடி நியூடவுன் மேம்பாலத்திற்கு முதலில் நிலத்தை கையகப்படுத்திய பின்னர் தான் மேம்பாலம் கட்டும் பணியை துவக்க உள்ளோம் என்றும் கடந்த ஆட்சியை போல் இல்லாமல், ல் முதலில் 90 சதவிகிதம் நிலத்தை கையகப்படுத்திய பின்னர் தான் பாலம் மற்றும் சாலையை அமைக்க உள்ளோம் என்றார்.

மேலும் ஆம்பூர் - வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை குறைக்க விரைவில்  ஆய்வு கூட்டம் நடத்த உள்ளோம், மேலும் ஐந்து துறைகள் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம் என தெரிவித்தார். இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

செய்தியாளர்: M.வெங்கடேசன்

First published:

Tags: Local News, Vellore