ஹோம் /நியூஸ் /திருப்பத்தூர் /

முழு விவரம் - ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு அமைப்புடன் தொடர்பு.. ஆம்பூர் கல்லூரி மாணவன் கைது

முழு விவரம் - ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு அமைப்புடன் தொடர்பு.. ஆம்பூர் கல்லூரி மாணவன் கைது

தீவிரவாத அமைப்புடன் தொடர்பு ஆம்பூர் கல்லூரி மாணவன் கைது - முழு தகவல்

தீவிரவாத அமைப்புடன் தொடர்பு ஆம்பூர் கல்லூரி மாணவன் கைது - முழு தகவல்

ஆம்பூரில் முக்கிய பிரமுகர் ஒருவரை கொலை செய்ய அனாஸ் அலி மூலம் தீவிரவாதிகள் திட்டம் போட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ambur, India

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் அனாஸ் அலி. 21 வயதான அனாஸ் அலி ஆற்காட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

சனிக் கிழமை காலை 5 மணியளவில் அனாஸ்அலி வீட்டிற்குள் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் என 10 பேர் கொண்ட குழுவினர் திடீரென புகுந்து சோதனை நடத்தினர். அனாஸ் அலியின் வீட்டில் இருந்து 2 செல்போன்கள், ஒரு லேப்-டாப் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அவரை வேலூர் மாவட்டம் அணைகட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

காவல் நிலையத்தில் வைத்து சுமார் 15 மணி நேரம் விசாரணை மேற்கொண்டதில், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளுடன் அனாஸ் அலி தொடர்பில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் பதிவுகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அவற்றை லைக் (like) மற்றும் சேர் (share), செய்துள்ளார் அனாஸ் அலி.

மேலும் ஆம்பூரில் முக்கிய பிரமுகர் ஒருவரை கொலை செய்ய அனாஸ் அலி மூலம் தீவிரவாதிகள் திட்டம் போட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. லண்டன், மொராக்கோ, போன்ற நாடுகளில் உள்ளவர்களிடம் இணையதளம் மூலம் தொடர்பு கொண்டு அனாஸ் அலி பேசியதும் அவரது லேப்-டாப்பை ஆய்வு செய்ததில் தெரியவந்தது. வெளிநாடுகளில் இருந்து பேசியவர்கள் யார், அவர்களின் பின்புலம் என்ன என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தடை செய்யப்பட்ட இயக்கங்களில் உறுப்பினராக சேர்வது குறித்த படிவங்களை அனாஸ் அலி பதிவிறக்கம் செய்து வைத்திருந்ததும் தெரியவந்தது. விசாரணை முடிவில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக அனாஸ் அலி கைது செய்யப்பட்டார். அவர் மீது உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அனாஸ் அலியை தற்போது வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். தீவிரவாத தொடர்பில் இருந்த பொறியியல் பட்டதாரி மாணவர் ஆம்பூரில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

First published:

Tags: Ambur, College student