முகப்பு /செய்தி /திருப்பத்தூர் / வாணியம்பாடி அருகில் தண்டவாளத்தில் விரிசல்... ஒரு மணி நேரம் தாமதமாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள்...

வாணியம்பாடி அருகில் தண்டவாளத்தில் விரிசல்... ஒரு மணி நேரம் தாமதமாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள்...

தண்டவாளத்தில் ஏற்ப்பட்ட விரிசலை சரி செய்யும் பணியாளர்கள்

தண்டவாளத்தில் ஏற்ப்பட்ட விரிசலை சரி செய்யும் பணியாளர்கள்

Tirupathur | வாணியம்பாடி ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirupathur (Tiruppattur), India

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையம் அருகில் சென்னை - ஜோலார்பேட்டை மார்க்கத்தில் 65 வது பாயிண்ட் என்ற இடத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தண்டவாள பராமரிப்பு பணி ஊழியர் கண்டுபிடித்து ரயில்வே நிலைய  மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஜோலார்பேட்டையில் இருந்து விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை வெல்டிங் செய்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த பணிக்கு பின்னர் தண்டவாளம் சரி செய்யப்பட்டது.

இதன் காரணமாக சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக பெங்களூர், கோயம்புத்தூர் செல்லும் பயணிகள் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு லூப் லைன் வழியாக மெதுவாக இயக்கப்பட்டது.

சென்னையில் இருந்து கோயம்புத்தூர் சென்ற கோவை எக்ஸ்பிரஸ் ரயில் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதேபோன்று சென்னையில் இருந்து பெங்களூர் செல்லக்கூடிய டபுள் டக்கர் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.

Also see... Also see... புதிய பாலம் கட்டுமானத்தால் 300 ஏக்கர் விவசாயம் பாதிப்பு...

பின்னர் ரயில்கள் தண்டவாளம் விரிசல் சரி செய்யப்பட்ட பிறகு ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

செய்தியாளர்: M.வெங்கடேசன்,திருப்பத்தூர் 

First published:

Tags: Tirupattur, Train