முகப்பு /செய்தி /திருப்பத்தூர் / திமுக நிர்வாகி இறுதிஊர்வலத்தில் மனைவிகளின் உறவினர்கள் மோதல் - பக்கத்து வீட்டுக்காரருக்கு கத்திக்குத்து

திமுக நிர்வாகி இறுதிஊர்வலத்தில் மனைவிகளின் உறவினர்கள் மோதல் - பக்கத்து வீட்டுக்காரருக்கு கத்திக்குத்து

இறுதி ஊர்வலத்தில் மோதல்

இறுதி ஊர்வலத்தில் மோதல்

Tirupathur | ஆம்பூரில் கணவனின் சவ ஊர்வலத்தில் பிரச்னை ஏற்படுத்திய 2 வேறு சமூகத்தை சேர்ந்த மனைவிகள். இதனால் 5 பேர் ஐந்து பேர் காயமடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirupathur (Tiruppattur), India

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பன் இவர் திமுக கிளைச் செயலாளராக இருந்து வந்த நிலையில் இவருக்கு இரு வேறு சமூகத்தினை சேர்ந்த இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி கமலா இரண்டாவது மனைவி மலர் இருவரும் இரு வேறு சமூகத்தினை சேர்ந்தவர்கள் என்பதால் தனித்தனியே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சின்னப்பன் உடல்நிலை சரியில்லாமல் நேற்றுமுன்தினம் காலை உயிரிழந்த நிலையில் அவரது இறுதி ஊர்வலத்தின் போது நடனம் ஆடுவது தொடர்பாக முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவி ஆகிய இரு தரப்பினரின் உறவினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது.

இந்த கைகலப்பில் நான்கு பேர் காயமடைந்து ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இறந்த சின்னப்பனின் பக்கத்து வீட்டுக்காரரான தாமோதரன் வீட்டை மற்றொரு தரப்பினரான மலரின் உறவினர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.

பின்னர் தாமோதரனின் மகன் இளவரசனை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்த சிசிடிவி கேமராக்களையும் உடைத்து விட்டு மோதல் தொடர்பாக வீடியோ காட்சிகளை பதிவு செய்த இளைஞர்களையும் தாக்கி அவர்கள் வைத்திருந்த செல்போன்களை பிடிங்கி உடைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையிலான காவல்துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை மேற்கொண்டு இரு தரப்பிலும் சிலரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also see...சிவிங்கி புலிகளுக்கும் சிறுத்தைக்கும் உள்ள வேறுபாடு

ஆம்பூர் அருகே திமுக நிர்வாகியின் சவ ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலால் ஐந்து பேர் காயமடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர்: M.வெங்கடேசன்,திருப்பத்தூர் 

First published:

Tags: Ambur, Crime News, Death, DMK cadres