திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லி மசூதி தெருவில் வசித்து வருபவர் அனாசலி (வயது 21) என்ற பொறியியல் படிக்கும் மாணவர். இவரை இன்று அதிகாலை மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் 10 பேர் கொண்ட குழுவினர் திடீரென கைது செய்துள்ளனர். மேலும் மாணவனிடம் இருந்து ஒரு லேப்டாப் இரண்டு செல் போன்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
அதனை தொடர்ந்து அவரை வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு காவல் நிலையத்தில் வைத்து சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட தகவலாக கைதாகியுள்ள அனாசலி லண்டன், மொராக்கோ, போன்ற நாடுகளில் உள்ளவர்களிடம் இணையதளம் மூலம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து பேசியவர்கள் யார்? அவர்களின் பின்புலம் என்ன? மேலும் கைதான அனாசலியின் முந்தைய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் மத்திய புலனாய்வு துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
Also see... மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி: பதக்கத்தை குவித்த அஜித்
மேலும் தீவிரவாத அமைப்புகளை கண்காணிக்கும் இந்த அமைப்பு ஆம்பூரை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவரை ரகசியமாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இவருக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா?.. என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஆம்பூரில் பொறியியல் கல்லூரி மாணவர் அதிகாலையில் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: M.வெங்கடேசன், திருப்பத்தூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Arrest, College student, Thirupathur