ஹோம் /நியூஸ் /திருப்பத்தூர் /

கல்யாணம் பண்ணனுமா..! ஐயோ.. நண்பர்களை ஏவி காதலன் மீது தாக்குதல் நடத்திய காதலி

கல்யாணம் பண்ணனுமா..! ஐயோ.. நண்பர்களை ஏவி காதலன் மீது தாக்குதல் நடத்திய காதலி

பிடிபட்ட மூன்றுபேரிடம் விசாரணை

பிடிபட்ட மூன்றுபேரிடம் விசாரணை

Tirupattur : காதல் விவகாரத்தில், திருப்பத்தூர் மாவட்டம் திருமாஞ்சோலை குடியிருப்பு பகுதிக்குள் கத்தியோடு நுழைந்து, தாக்குதல் நடத்திய கும்பலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

திருப்பத்தூர் மாவட்டம்  வாணியம்பாடி அருகே 6 ஆண்டுகளுக்கு மேல் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய காதலன் அழைத்த நிலையில் காதலியின்  நண்பர்கள்,  காதலன் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் கத்தியோடு நுழைந்து தாக்குதல் நடத்திய நிலையில் பிடிபட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமாஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், ஏலகிரி மலை பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா. இவர்கள் இருவரும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சக்திவேல் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனால், ஐஸ்வர்யாவின்  நண்பர்கள் சாந்தகுமார், பூவரசன், ஹரி  ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட கும்பல், ஏலகிரி மலையில் இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் திருமாஞ்சோலை பகுதியில் உள்ள சக்திவேல் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது சக்திவேலை அழைத்து ஐஸ்வர்யாவை திருமணத்திற்காக வற்புறுத்த வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.

இதன்காரணமாக சக்திவேல் மற்றும் ஐஸ்வர்யாவின் நண்பர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் சக்திவேல் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது, அங்கிருந்த குடியிருப்புவாசிகள் ஒன்று சேர்ந்து 5 பேரையும் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். அதில் 2 பேர் தப்பி ஓடியுள்ளனர். 3 பேர் மற்றும் அவர்கள் கொண்டு வந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வாணியம்பாடி நகர  போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தாக்குதல் நடத்தியவர்களை வளைத்துப் பிடித்த பொதுமக்கள்

குடியிருப்பு பகுதியில் இருந்த பொதுமக்கள் தாக்கியதில் பூவரசன், ஹரி, மற்றும் சாந்தகுமார் ஆகியோர் படுகாயம் அடைந்ததால் அவர்களை  வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக காவல்துறையினர் சேர்த்துள்ளனர். மேலும்,  இதுகுறித்து வாணியம்பாடி நகர காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Must Read : 17 ஆண்டுகளுக்கு பின் மனைவி நடத்தையில் சந்தேகம் - ஷூலேஸால் கழுத்தை இறுக்கி கொன்ற கணவன்

இந்த தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்திற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் - M.வெங்கடேசன்,  திருப்பத்தூர்.

First published:

Tags: Attacked, Crime News, Love issue, Tirupattur