ஹோம் /நியூஸ் /திருப்பத்தூர் /

ஓபிஎஸ் Vs இபிஎஸ் : வாணியம்பாடியில் அதிமுகவினரிடையே பரபரக்கும் பேனர் யுத்தம்.. போலீசில் புகார்..

ஓபிஎஸ் Vs இபிஎஸ் : வாணியம்பாடியில் அதிமுகவினரிடையே பரபரக்கும் பேனர் யுத்தம்.. போலீசில் புகார்..

வாணியம்பாடியில் அதிமுகவினர் வைத்துள்ள பேனர்கள்

வாணியம்பாடியில் அதிமுகவினர் வைத்துள்ள பேனர்கள்

ops vs eps : வாணியம்பாடியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி அதிமுக ஓ.பி.எஸ் அணியினர் வைத்த பேனரை அகற்றிய ஈ.பி.எஸ் அணியினர் மீது  நடவடிக்கை எடுக்ககோரி வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில்  புகார் அளித்த ஓ.பி.எஸ் அணியினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirupathur (Tiruppattur), India

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வாரச்சந்தை மேம்பாலம் அருகே எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி அதிமுக பன்னீர் செல்வம் அணியினர் பேனர் வைத்துள்ளனர். இந்நிலையில் நாளை இதே பகுதியில் அதிமுக எடப்பாடி பழனிசாமி அணியினர் சார்பில் எம்.ஜி.ஆர் 106வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக இப்பகுதியில் பேனர் வைக்க வந்த எடப்பாடி அணியினர் பன்னீர் செல்வம் அணியினர் வைத்த பேனரை  அகற்றியுள்ளனர்.

இந்நிலையில் எந்தவித அறிவிப்பும் இன்றி தாங்கள்  வைத்த பேனரை அகற்றி பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைத்துள்ள எடப்பாடி அணியினர்  மீது நடவடிக்கை எடுக்கோரி பன்னீர் செல்வம் அணியினர் வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில்  ஓ.பி.எஸ் அணியின் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் சுரேஷ் பாபு கட்சியினருடன் சென்று புகார் மனு அளித்தார். இதனால் பேனர் கலாச்சாரத்தால் தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு வருகிறது.

செய்தியாளர் : வெங்கடேசன் - திருப்பத்தூர்

First published:

Tags: Local News, OPS - EPS, Thirupathur