Home /News /tirupattur /

ஒரே நாளில் 3 பேருக்கு பாம்பு கடி.. 6 வயது சிறுவன் உயிரிழப்பு - ஆம்பூரில் சோகம்

ஒரே நாளில் 3 பேருக்கு பாம்பு கடி.. 6 வயது சிறுவன் உயிரிழப்பு - ஆம்பூரில் சோகம்

பாம்பு கடித்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு

பாம்பு கடித்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு

ஆம்பூர் அருகே விளையாடி கொண்டிருந்த 1ம் வகுப்பு சிறுவன் பாம்பு கடித்ததில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் மேகநாதன். இவரது 6 வயது மகன் தர்ஷன் 1ம் வகுப்பு படித்து வரும் நிலையில், நேற்று இரவு தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பாம்பு கடித்துள்ளது. இதனால், சிறுவன் மயக்கம் அடைந்துள்ளான். =

    இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுவனை மீட்டு, சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுவனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி  தர்ஷன் பரிதாபமாக  உயிரிழந்துள்ளான். இதுகுறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், காரப்பட்டு பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரை பாம்பு கடித்த நிலையில் அவர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அவரை அனுப்பி வைத்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதேபோல, பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்ற இளைஞரை பாம்பு கடித்தது. இதனைத் தொடர்ந்து அவர் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Must Read : துபாய் கடத்தல் தங்கத்தை தேடி கடலூர் வந்த கும்பல்.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - போலீசார் விசாரணை

    ஒரே நாளில் மூன்று பேரை பாம்பு கடித்த நிலையில், சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் - M.வெங்கடேசன்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Ambur, Snake, Tirupattur

    அடுத்த செய்தி