ஹோம் /நியூஸ் /திருப்பத்தூர் /

5 மாத கர்ப்பிணி பெண் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.. திருப்பத்தூரில் சோகம்

5 மாத கர்ப்பிணி பெண் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.. திருப்பத்தூரில் சோகம்

கர்ப்பிணி பெண் உயிரிழப்பு

கர்ப்பிணி பெண் உயிரிழப்பு

திருப்பத்தூர் அருகே சின்ன பசிலிக்குட்டையில் மாட்டு கொட்டகையை சுத்தம் செய்தபோது மின்சாரம் தாக்கி பூர்ணிமா உயிரிழந்தார்.

 • Local18
 • 1 minute read
 • Last Updated :
 • Tirupattur, India

  திருப்பத்தூர் மாவட்டம்  சின்னபசிலிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜாதேசிங்கு. இவருக்கு நான்கு வருடங்கள் முன்பு பூர்ணிமா (25) என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக பூர்ணிமா இருந்துள்ளார்.

  இன்று வீட்டுக்கு அருகில் உள்ள மாட்டு கொட்டகையில் வாட்டர் சர்வீஸ் செய்யும் கருவியில் மாட்டு கொட்டகையை சுத்தம் செய்யும்பொழுது எதிர்பாராத விதமாக கருவியில் இருந்து மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பூர்ணிமா உயிரிழந்தார்.

  பின்னர் நீண்ட நேரமாக பூர்ணிமா வெளியே வராதை அறிந்து வீட்டின் உறவினர்கள் மாட்டு கொட்டகை சென்று பார்த்தபோது பிணமாக இருந்துள்ளார்.

  பின்னர் இதுகுறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசருக்கு தகவல் தெரிவித்ததன் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிராமிய போலீசார் வீட்டின் மின் இணைப்பை துண்டித்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  Also see... சத்தீஸ்கரில் காணாமல் போன 3 சிறுமிகள் கரூரில் மீட்பு...

  மாட்டு கொட்டகை சுத்தம் செய்யும்பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி 5 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  செய்தியாளர்: M.வெங்கடேசன், திருப்பத்தூர் 

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Dead, Pregnancy, Tirupattur, Women