முகப்பு /செய்தி /திருப்பத்தூர் / கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு : இலவச வேட்டி, சேலை வாங்க சென்றபோது நேர்ந்த சோகம்!

கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு : இலவச வேட்டி, சேலை வாங்க சென்றபோது நேர்ந்த சோகம்!

வாணியம்பாடி

வாணியம்பாடி

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் தனியார் நிகழ்ச்சியில் இலவசமாக வேட்டி, சேலை வழங்கும்போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirupattur, India

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்ற  இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர்.

தைப்பூசத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் சார்பில் இலவச புடவைகள் வழங்குவதாக அறிவித்ததை அடுத்து பெண்கள் ஒரே இடத்தில் குவிந்தனர். ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டு பெண்கள் மயக்கமடைந்தனர்.

இலவச வேட்டி, சேலைக்கான டோக்கன் பெற முயன்றபோது நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த 10 பேர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வட்டாட்சியர், போலீசார் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

First published: