முகப்பு /செய்தி /திருநெல்வேலி / நெல்லை அருகே பைக்கில் வந்த இளைஞர் வெட்டி படுகொலை... பழிக்கு பழியா என காவல்துறை விசாரணை...

நெல்லை அருகே பைக்கில் வந்த இளைஞர் வெட்டி படுகொலை... பழிக்கு பழியா என காவல்துறை விசாரணை...

திருநெல்வேலி - நடுரோட்டில் இளைஞர் வெட்டி கொலை

திருநெல்வேலி - நடுரோட்டில் இளைஞர் வெட்டி கொலை

தச்சநல்லூர்  அருகே பட்டப் பகலில் பைக்கில் வந்த இளைஞரை வெட்டி படுகொலை செய்த  மூன்று பேர் கொண்ட கும்பல் தப்பி ஓடியது. பழிக்கு பழியா என காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி தச்சநல்லூர் அடுத்த பால் கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் பேச்சிராஜன் வயது 24. இவருக்கு திருமணம் ஆகி 3 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கூலி தொழிலாளியான இவர் வேலை நிமித்தமாக தனது கிராமத்திலிருந்து வண்ணாரப்பேட்டை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

அப்போது தச்சநல்லூர் பைபாஸ் சாலை பிரிவில் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் அவரை விரட்டியுள்ளனர். வாகனத்தை வழிமறித்து நிறுத்தி தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தலை முதுகு ஆகிய பகுதிகளில் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

தகவல் அறிந்து உறவினர்கள் நண்பர்கள் அந்த பகுதியில் கூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடலை எடுக்க விடாமல் அவர்கள் போராட்டம் நடத்தியதால் திருநெல்வேலி  - மதுரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை ஆணையர் அவிநாஷ் குமார், துணை ஆணையர்  சீனிவாசன் ஆகியோர் உறவினர்கள் இடமிருந்து உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். தங்களது கிராமத்தின் வெளியே தொடர்ந்து முகாமிட்டுள்ள உறவினர்கள் பொதுமக்கள் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இதனிடையே கொலை செய்யப்பட்ட பேச்சி ராஜன் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த கொலை சம்பவத்தில் ஒன்பதாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த கொலை சம்பவத்திற்கு பழிக்கு பழியாக பேச்சிராஜனை கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Also see... நெடுஞ்சாலையில் எச்சரிக்கை பலகைகளை குறிவைத்து திருடும் கும்பல் கைது...

காவல்துறையின் அலட்சிய போக்காலையே இந்த கொலை சம்பவம் நடைபெற்றதாகவும் 2020ல் நடந்த கொலை சம்பவத்திற்கும் பேச்சி ராஜனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கூறுகின்றனர்.

மீண்டும் தொடங்கிய ஜாதிய படுகொலையால் திருநெல்வேலி  மாநகர பகுதிகளில் பதட்டமான சூழல் நிலவுகிறது. அதனால் அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

செய்தியாளர்: ஐயப்பன், திருநெல்வேலி 

First published:

Tags: Murder, Tirunelveli