ஹோம் /நியூஸ் /திருநெல்வேலி /

நெல்லையில் மாடியில் துணி காயபோட்ட இளைஞர் மின்சாரம் தாக்‍கி பலி...

நெல்லையில் மாடியில் துணி காயபோட்ட இளைஞர் மின்சாரம் தாக்‍கி பலி...

மின்சாரம் தாக்கி பலி

மின்சாரம் தாக்கி பலி

Tirunelveli | நெல்லை பாளையங்கோட்டை அருகே மாடியில் துணி காய போட்ட கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மின்வாரியத்தை கண்டித்து மின் பகிர்மான கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirunelveli, India

    நெல்லை பாளையங்கோட்டை அடுத்த சமாதானபுரம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் குடும்பத்துடன் அந்தப் பகுதியில் உள்ள ஒருவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். நடராஜனின் மகன் பாலமூர்த்தி(20) பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் பாலமூர்த்தி கடந்த 31ந்தேதி அன்று தனது வீட்டின் மாடி சுவரில் துணி காய போட்டு கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    மழை நேரம் என்பதாலும் உயரழுத்த மின் வயர் சுவரில் தொட்டபடி மிக தாழ்வாக சென்றதாலும் சுவர் வழியாக மின்சாரம் பாய்ந்ததில் பாலமூர்த்தி இறந்துள்ளதாக தெரிகிறது. தகவல் அறிந்து அங்கு சென்ற பாளையங்கோட்டை காவல்துறையினர் பால மூர்த்தியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் மின்வாரியம் மற்றும் மாநகராட்சியின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நடைபெற்றதாக அப்பகுதி பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளை கண்டித்தும், தாழ்வாக செல்லும் மின் வயர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு உயிரிழந்த மாணவரின் குடும்பம் மற்றும் ஆதி தமிழர் பேரவை, தமிழ்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    Also see... அஸ்ஸாம் - மேற்கு வங்க மாநில எல்லையில் பணியிலிருந்த கூடலூரை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு  

    இதில் காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..

    செய்தியாளர்: ஐயப்பன், நெல்லை

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Death, Electricity, Nellai