ஹோம் /நியூஸ் /திருநெல்வேலி /

2 பல்பு, 2 ஃபேன்னுக்கு ரூ.91,130 மின் கட்டணம்... ஷாக் கொடுத்த கரண்ட் பில்!

2 பல்பு, 2 ஃபேன்னுக்கு ரூ.91,130 மின் கட்டணம்... ஷாக் கொடுத்த கரண்ட் பில்!

ஷாக் அடித்த கரெண்ட் பில்

ஷாக் அடித்த கரெண்ட் பில்

Thirunelveli | அரசு மானியத்துடன் கட்டப்பட்ட வீட்டில் தந்தையும் மகளும் மட்டுமே வாழ்ந்து வரும் சூழலில் இரண்டு மாத மின் கட்டணமாக 91 ஆயிரத்து 130 ரூபாய்  வந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tirunelveli, India

வள்ளியூரை சேர்ந்த நபர் ஒருவர் வீட்டிக்கு  இரண்டு மாத மின் கட்டணமாக  91,130 ரூபாய் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த துலுக்கர்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முகமது பாத்து.(வயது40)இவர் தனது தந்தை உதுமான் கனியுடன் அரசு  மானியத்தில் பசுமை வீடு கட்டி அந்த  வீட்டில் வாழ்ந்து வருகின்றார்.இந்நிலையில் அவரது செல் போனுக்கு கடந்த  சில தினங்களுக்கு முன்பு மின்வாரியத்தில் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் இருமாதத்திற்கான மின்கட்டண தொகை 91 ஆயிரத்து 130 ரூபாய் என்றும்  மின் கட்டணத்தை அபராதம் இன்றி கட்டுவதற்கு கடைசி தேதி  வரும் நவம்பர் 5ஆம் தேதி என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை கண்ட  முகமது பாத்து வியர்த்து விறுவிறுத்து  அதிர்ச்சியில் ஷாக்காகி செய்வதறியாது திகைத்துள்ளார். நாங்குநேரி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று  இது குறித்து விளக்கம் கேட்டுள்ளார். மேலும் தனது வீட்டிற்கு கடந்த முறை ரூபாய் 65 மட்டுமே மின் கட்டணமாக  செலுத்தியுள்ளேன்  .இந்த மாதம் மட்டும் எப்படி  இவ்வளவு அதிகமாக வந்துள்ளது வீட்டில் இரண்டு அறைகள் மட்டும் தான் உள்ளது. வீட்டில் இருப்பது மொத்தமே இரண்டு பேர் தான்  இரண்டு பல்புகள் இரண்டு பேன் மட்டுமே உள்ள நிலையில்   எப்படி 91 ஆயிரம் பில்  வந்துள்ளது என புலம்பி தீர்த்து உள்ளார்.

இதனை அடுத்து மின்வாரிய ஊழியர்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தவறு ஏற்பட்டிருக்கலாம் எனவும் இரண்டு நாளில் இது குறித்து தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர் .உண்மையான கட்டண ரசீது விரைவில்  வந்துவிடும்; மின்மீட்டரை  ஆய்வு  செய்து தெரிவிப்பதாகவும்  அதுவரை  பதற்றப்பட வேண்டாம் என கூறி சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி உள்ளனர்.

அரசு மானியத்துடன் கட்டப்பட்ட வீட்டில் தந்தையும் மகளும் மட்டுமே வாழ்ந்து வரும் சூழலில் இரண்டு மாத மின் கட்டணமாக 91 ஆயிரத்து 130 ரூபாய்  வந்துள்ளது அப்பகுதி தெருவாசிகளிடம் "பரபரப்பையும்" முகமது பார்த்துவை "மின்சாரம்  அதிர்ச்சியிலும்" ஆழ்த்தியுள்ளது.

Read More : மகன்களுக்கு விஷம் கொடுத்து கொன்று பெண் தற்கொலை - மதுரையில் சோகம்

இந்த நிலையில் நேற்று மின்வாரியம் முகமது பாத்துவுக்கு புதிய கட்டண ரசீதை அனுப்பியுள்ளது. அதில்  கட்டணமாக ரூபாய் 122 ரூபாய்  என குறிப்பிட்ட பின்னரே அதிர்ச்சியில் இருந்து முகமது பாத்து மீண்டுள்ளார்.56 ரூபாய் என இருந்த மின்கட்டணம் உயர்த்தப்பட்டதன்  காரணமாக 122 ரூபாயாகியுள்ளது  கட்டணம் 100 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது என கூறியுள்ளார்.

அதிக கட்டணம் வந்தது  குறித்து மின்சார வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது போதுமான அளவு ஊழியர்கள் இல்லை குறைந்த அளவு பணியாளர்களை கொண்டே செயல்பட்டு வருகிறோம்  பணிச்சுமை காரணமாக தவறுகள் ஏற்பட்டு விடுகிறது போதுமான ஊழியர்களை அரசு நியமிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Electricity bill, Thirunelveli