ஹோம் /நியூஸ் /திருநெல்வேலி /

மாஞ்சோலையில் சுற்றுலாப் பயணிகளின் நண்பனாக சுற்றிவரும் மிளா

மாஞ்சோலையில் சுற்றுலாப் பயணிகளின் நண்பனாக சுற்றிவரும் மிளா

மிளா மான்

மிளா மான்

இதுவரை எந்த ஒரு விலங்கினமும் இது போல் பழகுது இல்லை என்று அப்பகுதியில் வாழும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tirunelveli | Tirunelveli | Tamil Nadu

  நெல்லை அருகே மான் ஒன்று சுற்றுலா பயணிகளிடம் நட்புடன் பழகி வரும் சம்பவம் அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

  நெல்லை மாவட்டத்தின் ஊட்டி என அழைக்கப்படும் பகுதி மாஞ்சோலை நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட் பகுதிகள். இது களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் ஆகும்.

  இப்பகுதியில் கரடி, சிறுத்தை, மிளா போன்ற வன விலங்குகள் சுற்றித் திரிவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வயதான யானை ஒன்று பொதுமக்களிடம் பழகி வந்த நிலையில், தற்போது நாலு முக்கு பகுதியில் மிளா ஒன்று குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி திரிந்து வருகிறது.

  பொதுவாக இரவு நேரங்களில் உலா வரும் மிளா தற்போது பகல் நேரங்களிலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லாமல் சுதந்திரமாக சுற்றித் திரிகிறது. மேலும் எஸ்டேட் பகுதிகளுக்குள் சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் எடுக்கும் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தும் வருகிறது.

  இதையும் படிங்க | நெல்லையில் மாடியில் துணி காயபோட்ட இளைஞர் மின்சாரம் தாக்‍கி பலி...

  வனப்பகுதிக்குள் இருக்கும் இந்த விலங்கு சுற்றுலா பயணிகளிடம் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணி போல் அன்பாக பழகி வருவதால் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதுவரை எந்த ஒரு விலங்கினமும் இது போல் பழகியது இல்லை என்று அப்பகுதியில் வாழும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

  செய்தியாளர்: ஐயப்பன், நெல்லை.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Deer, Tirunelveli, Viral Video