"ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து, அதிமுக, பாஜக கட்சி தலைமைகள் முடிவெடுக்கும்" என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கமளித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.
இதற்கிடையே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் பா.வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் திருநெல்வேலியில் பாஜக சட்டசபை குழு தலைவரான நயினார் நாகேந்திரன் பத்திரிகையாளர் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ கூட்டணிக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தேர்தல் நேரத்தில் ஒன்று சேர்ந்து பணியாற்றுவோம். அதிமுக கூட்டணியில்தான் பாஜக உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து, அதிமுக, பாஜக கட்சி தலைமைகள் முடிவெடுக்கும்.” என்றார்.
தேர்தல் பணிக்குழு குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், “ தேர்தலில் பணியாற்ற 14 பேர் கொண்ட குழுவை பாஜக நியமனம் செய்துள்ளது; இது வேலைக்கான குழு மட்டுமே” என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் யார் போட்டியிட்டாலும் பாஜக முழு ஆதரவு தெரிவிக்கும்” என்று அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Nainar Nagendran