காங்கிரஸ் கட்சி ஜனநாயக ரீதியிலான கட்சி. நாங்கள் பலமாக இருப்பதால்தான் கோஷ்டி மோதல் ஏற்பட்டு அடிதடி வரை சென்றுள்ளதாக நெல்லையில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தெரிவித்துள்ளார்.
செக்கிழுத்த செம்மல் வ.உ.சி நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லையில் உள்ள மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சி சாரிபில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், காங்கிரஸ் கட்சி வளர்ச்சி நன்றாக உள்ளது. பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனையை ஆறு, ஏழு பேருந்துகளில் ஆட்களை அழைத்து வந்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த பிரச்சனையை போல் பண்ணி இருக்க வேண்டாம் என தெரிவித்தார்.
Also Read : முகமெல்லாம் ரத்தம்.. அடிதடியில் முடிந்த காங்கிரஸ் கூட்டம்.. தலைமை அலுவலகத்தில் பரபரப்பு!
காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கைகலப்பு நடந்தது உண்மைதான். இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரியை மறித்ததால் தான் இதுபோன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அடியாட்கள் இருந்ததாக சொல்வது தவறான தகவல். ரூபி மனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சொல்லி இருக்கிறார்கள். அவரை நீக்குவது குறித்து எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.
ஜனநாயக ரீதியிலான கட்சி காங்கிரஸ் கட்சி, தேர்தல் டிஆர்ஓ தலைமையில் நடைபெற்று உள்ளது. மதுபோதையில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இடம் பேசியதால் அவர் கன்னத்தில் அடிப்பது போன்ற செயல் நடைபெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி பலமாக இருப்பதால்தான் கோஷ்டி மோதல் நடைபெற்று அடிதடி நடைபெறுகிறது. இதனைப் பேசி சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனக்கு நெருங்கிய நண்பர் ரூபி மனோகரன் அவரை நீக்க நான் தீர்மானம் கொண்டு வர ஆதரவு தெரிவிக்கவில்லை. அடுத்த கட்டமாக எம்எல்ஏ வையும் மாவட்ட தலைவரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress, Congress party, Tirunelveli