முகப்பு /செய்தி /திருநெல்வேலி / போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியர்: நடவடிக்கை எடுக்க ஆதாரங்களை அனுப்பியவருக்கு திருப்பி அனுப்பிய அதிகாரி!

போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியர்: நடவடிக்கை எடுக்க ஆதாரங்களை அனுப்பியவருக்கு திருப்பி அனுப்பிய அதிகாரி!

புகார் அளித்த நபர்

புகார் அளித்த நபர்

Tuticorin Education Department | போலி சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்துள்ள ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்து இருந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kovilpatti, India

கோவில்பட்டியில் நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்தவருக்கே புகார் மனு மற்றும் ஆதாரங்களை அனுப்பி வைத்த கல்விதுறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காமராஜர் தெருவினை சேர்ந்தவர் ராஜீ. காவல்துறையில் இருந்த ஓய்வு பெற்றவர். இவர் கயத்தார் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியை ஒருவர், கிறிஸ்துவ மதத்தில் இருந்து கொண்டு இந்து என்று கூறி சாதிசான்றிதழ் பெற்று பணியில் சேர்ந்துள்ளதாகவும், அவருடைய சாதிசான்றிதழ் குறித்து ஆய்வு செய்து அந்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர், மாவட்ட ஆட்சியர் என சம்பந்தபட்ட துறைகளுக்கு புகார் மனு அளித்துள்ளார்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் இருந்து ஒரு தபால் வந்துள்ளது. அதனை பிரித்து பார்த்த போது, அவர் புகார் அனுப்பிய மனு, அதற்கான ஆதாரங்கள், புகார் மனு அனுப்பி வைத்த கவர் ஆகியவை திரும்ப வந்துள்ளது. மேலும் கோவில்பட்டி கல்வி மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு என்று குறிப்பிடப்பட்ட தபால் ஒன்றும் இருந்துள்ளது.

அந்த தபாலில் முதன்மை கல்வி அலுவலர் கையொப்பம், அலுவலக சீல் எதுவும் இல்லை. நகல் இணைப்பு என்ற இடத்தில் ராஜீவின் முகவரி குறிப்படப்பட்டுள்ளது. ஒருவேளை கல்வி மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டிய தபாலாக இருந்தாலும் அலுவலக சீல், புகார் மனுவிற்கான எண் எதுவும் இல்லை. தான் அனுப்பிய புகாரை படித்து கூட பார்க்கமால் அப்படியே, தான் அனுப்பி கவருடன் வந்துள்ளதால் புகார் கொடுத்த ராஜீ அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்த நிலையில் இது குறித்து பேசிய ராஜீ, தான் அனுப்பிய புகார் மனுவினை பிரித்து படித்து கூட பார்க்கமால், தானேக்கே அனுப்பி வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஒருவேளை நடவடிக்கை எடுக்க தொடக்கல்வி அலுவலகத்திற்கு அனுப்பவதற்கு பதில் தனக்கு அனுப்பி வைத்து விட்டார்கள் என்றாலும், ஒருவர் புகார் கொடுத்தால், அதற்கு புகார் எண் வழங்க வேண்டும், அவ்வாறு எவ்வித எண்ணும் வழங்கப்படவில்லை.

மேலும் முதன்மை கல்வி அலுவலர் கையெப்பம் இல்லை, இவ்வாறு மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் புகார் மனுக்களை எவ்வளவு அலட்சியமாக கையாளுகிறார்கள் என்பதற்கு இது உதாரணமாக இருப்பதாகவும், அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜூ கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தினை தொடர்பு கொண்டு கேட்ட போது, இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டும் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Kovilpatti, Tuticorin