ஹோம் /நியூஸ் /திருநெல்வேலி /

திருநங்கையை லாரியில் கடத்தி சென்று கொலை செய்த கொடூரம்..! வாக்குமூலத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

திருநங்கையை லாரியில் கடத்தி சென்று கொலை செய்த கொடூரம்..! வாக்குமூலத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

திருநங்கை பிரபு

திருநங்கை பிரபு

சுத்தியலால் நெற்றியில் அடித்து காயப்படுத்திய நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென உடல்நிலை மோசமடைந்ததை திருநங்கை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirunelveli, India

நெல்லை மாவட்டத்தில் திருநங்கையை லாரியில் கடத்திச் சென்று அடித்துக் கொலை செய்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர். 

நெல்லை பேட்டையை அடுத்த சுத்தமல்லி பகுதியை சேர்ந்தவர் 35வயதான பிரபு.திருநங்கையான இவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாளை ரெட்டியார்பட்டி மலை பகுதியில் நான்கு வழிச்சாலை அருகே மயங்கி கிடந்தார்.அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பு வைத்தன்ர.

தகவல் அறிந்து விரைந்து வந்த பெருமாள்புரம் போலீசார் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.விசாரணையில் திருநங்கை தாக்கப்பட்டதற்கான திடுக்கிடும் காரணம் தெரியவந்தது.

பிரபு திருநங்கையாக மாறி யாசகம் வாங்கி பிழைத்து வந்துள்ளார்.தினமும் சுத்தமல்லியில் இருந்து புறப்பட்டு நாங்குநேரி டோல்கேட் சென்று அங்கு வாகனங்களில் வருபவர்களிடம் பணம் பெற்று வந்துள்ளார்.

Read More : மது போதை ட்ரைவர்.. நொறுங்கிய கார்.. பலியான பெண் எஞ்சினியர்.. சோகத்தில் முடிந்த லாங் ட்ரைவ் ..!

இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி டோல்கேட் பகுதியில் நின்று கொண்டிருக்கும் போது லாரியில வந்த இரண்டு பேர் அவரை அழைத்துள்ளனர். லாரியில் ஏறி குறிப்பிட்ட தூரம் சென்ற பின் அவரை இறக்கி விடும் போது, 11 ஆயிரம் ரூபாய் பணத்தை காணவில்லை எனக் கூறி பிரபுவை மிரட்டியுள்ளனர்.பணத்தை எடுத்தால் கொடுத்து விடுமாறு மிரட்டியதுடன், பிரபுவை தாக்கியதாகவும் தெரிகிறது.

வலி தாங்காமல் அவர் சத்தம் போட்டதால் அங்கிருந்து ரெட்டியார்பட்டி மலைப்பகுதிக்கு லாரியில் கூட்டிச்

சென்றுள்ளனர்.

பின் சுத்தியலால் நெற்றியில் அடித்து காயப்படுத்திவிட்டு அங்கேயே விட்டுச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளதுஇந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென உடல்நிலை மோசமடைந்ததை திருநங்கை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் லாரியில் வந்த இருவரைத் தேடி வருகின்றன்ர.

First published:

Tags: Crime News, Murder, Tirunelveli