முகப்பு /செய்தி /திருநெல்வேலி / திருநெல்வேலியில் பரவும் வைரஸ் காய்ச்சல்.. மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்!

திருநெல்வேலியில் பரவும் வைரஸ் காய்ச்சல்.. மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்!

மாதிரி படம்

மாதிரி படம்

Tirunelveli viral fever | திருநெல்வேலியில் அதிகளவு பரவும் வைரஸ் காய்ச்சலால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் அதிகரித்துள்ளதால் ஏராளமானோர் உள் நோயாளிகளாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் இன்ஃபுளூவன்சா A H3N2 காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக, 15 வயதிற்குட்பட்டவர்களை இந்த காய்ச்சல் அதிகமாக தாக்கி வருகிறது. தலைவலி, தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், கடுமையான உடல் வலி, இருமல் போன்றவை இந்த காய்ச்சலின் அறிகுறிகளாக உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்று முதல் நான்கு நாட்களுக்கு காய்ச்சல் விடுவதில்லை அதன் பிறகு ஒரு வாரம் வரை உடல் சோர்வாக காணப்படுகிறது.

அரசு புள்ளி விவரத்தின்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் நாள்தோறும் 70 நபர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். அதில் 65 சதவீதம் பேர் குழந்தைகளாக உள்ளனர்.

இதையடுத்து, திருநெல்வேலி மாவட்டத்தில் 40 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்படவுள்ளன. அதே நேரம் காய்ச்சல் கட்டுக்குள் இருப்பதாகவும் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Fever, Local News, Tirunelveli