முகப்பு /செய்தி /திருநெல்வேலி / மாணவிகளிடம் அத்துமீறிய தாளாளர்... பள்ளியில் மாணவிகள் போராட்டம்! - நெல்லையில் பரபரப்பு!

மாணவிகளிடம் அத்துமீறிய தாளாளர்... பள்ளியில் மாணவிகள் போராட்டம்! - நெல்லையில் பரபரப்பு!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தாளாளர்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தாளாளர்

Tirunelveli protest | மாணவர்களுக்கு ஆதரவாக அவர்களது பெற்றோர் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli | Tirunelveli

திருநெல்வேலி மேலப்பாளையம் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றதாக மாணவிகள் பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி  மேலப்பாளையத்தில் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பெரும்பாலும் இஸ்லாமிய மாணவிகளே கல்வி பயின்று வரும்  நிலையில் இந்த பள்ளியில் தாளாளராக இருக்கும் குதுபுன் நஜீப் என்பவர் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது. இதனை கேட்ட சக மாணவிகள் ஒன்றிணைந்து பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும்  இஸ்லாமிய அமைப்புகள் மாணவர்களுக்கு ஆதரவாக பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமாக சூழல் நிலவியது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதற்கு அவர்கள் தாளாளரை கைது செய்தால் மட்டுமே செல்வோம் என தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தாளாளர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் கைது செய்வோம் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Child Abuse, Crime News, Local News, Tirunelveli