ஹோம் /நியூஸ் /திருநெல்வேலி /

விமரிசையாக நடைபெற்ற நெல்லையப்பர் திருக்கல்யாணம்.. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்..!

விமரிசையாக நடைபெற்ற நெல்லையப்பர் திருக்கல்யாணம்.. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்..!

நெல்லையப்பர் திருக்கல்யாணம்

நெல்லையப்பர் திருக்கல்யாணம்

Tirunelveli | ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் சுவாமி அம்பாளுக்கு மாலை மாற்று வைபவம் நடந்தது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tirunelveli | Tirunelveli

  திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில், காந்திமதியம்பாள் - நெல்லையப்பர் திருக்கல்யாண வைபவம், ஆயிரங்கால் மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

  தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோயிலில், ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  விழாவின் முக்கிய நிகழ்வான காந்திமதி அம்பாளுக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் நேற்றைய தினம் நடந்தது.

  அதன் தொடர்ச்சியாக, அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் இன்று அதிகாலை 3 மணிக்கு காந்திமதி அம்பாள் எழுந்தருளினார். பின்னர் ஆயிரங்கால் மண்டபத்திற்கு  அழைத்து வரப்பட்ட நெல்லையப்பருக்கு, காந்திமதி அம்பாளை, கோவிந்தர் சுவாமி தாரைவார்த்துக் கொடுக்கும் வைபவம் நடைபெற்றது.

  ALSO READ | கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, கொலை..பிரபல ரவுடி ராக்கெட் ராஜா கைது...நெல்லை போலீசார் அதிரடி..

  அதன் தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் சுவாமி அம்பாளுக்கு மாலை மாற்று வைபவம் நடந்தது. பின்னர் மேளதாளங்களுடன் அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Nellai, Tirunelveli