ஹோம் /நியூஸ் /திருநெல்வேலி /

ஃபேஸ்புக்கில் ஃபேக் ஐடி.. இளம்பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட வாலிபர் கைது

ஃபேஸ்புக்கில் ஃபேக் ஐடி.. இளம்பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட வாலிபர் கைது

இளைஞர் கைது

இளைஞர் கைது

Nellai Crime News : இளம்பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியிட்ட வாலிபர் கைது.  

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirunelveli, India

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 27 வயது இளம்பெண் தனது தந்தையுடன் நெல்லை மாநகர காவல் ஆணையகரத்தில் பரபரப்பு புகார் அளித்தார்.  அந்தப்பெண்ணின்  போட்டோவை ஆபாசமாக சித்தரித்து ஃபேஸ்புக்கில் பேக் ஐடி  ஒன்று உருவாக்கி இருக்கிறார்கள். மேலும் அவருடைய ஒரிஜினல் பேஸ்புக் ஐடியில் இருக்கும் நண்பர்களுக்கு பேக் ஐடியில் இருந்து ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட் கொடுத்து தொடர்ந்து மெசேஜ் அனுப்பி வந்துள்ளனர்.

பேக் ஐடியில் இருந்து ஆபாசமாக மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. நண்பர்கள் மூலம் இதுகுறித்த தகவல்கள் அந்தப்பெண்ணுக்கு எட்டியுள்ளது. இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்தவர் உடனடியாக தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.  இதனை தொடர்ந்து பெண்ணின் தந்தை நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து புகார் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸார் நடத்திய விசாரணையில் சென்னையில்  இருந்து பேக் ஐடி உருவாக்கப்பட்டு மெசேஜ் அனுப்பியது தெரியவந்துள்ளது. இளம் பெண்ணின் போட்டோவை மார்பிங் செய்து ஆபாசமாக பேக் ஐடி உருவாக்கியது சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஹாப்ரோ குமார் (வயது 27) என்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: கல்லூரி மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டல்.. 2 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய இளைஞர்

இதனைத்தொடர்ந்து போலீஸார் அந்த இளைஞரை கைது செய்தனர். மேலும் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் : ஐயப்பன் (திருநெல்வேலி)

First published:

Tags: Crime News, Facebook, Local News, Tamil News, Tirunelveli