ஹோம் /நியூஸ் /திருநெல்வேலி /

நிலத்தை விற்று ஆன்லைன் ரம்மியில் ரூ.15 லட்சத்தை இழந்த வாலிபர்.. விரக்தியில் எடுத்த விபரீத முடிவு

நிலத்தை விற்று ஆன்லைன் ரம்மியில் ரூ.15 லட்சத்தை இழந்த வாலிபர்.. விரக்தியில் எடுத்த விபரீத முடிவு

தற்கொலை செய்துகொண்ட சிவன்ராஜ்

தற்கொலை செய்துகொண்ட சிவன்ராஜ்

Online Rummy | விவசாய குடும்பத்தில் பிறந்த சிவன் ராஜ் தனது விவசாய நிலத்தை விற்று ரூ.5 லட்சம் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியை அடுத்த ரோஸ்மியாபுரத்தை சேர்ந்தவர்  பாஸ்கர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மகன் சிவன்ராஜ். வாடகை கார் ஓட்டுநரான சிவன்ராஜ் சவாரி இல்லாத நேரத்தில் தன்னுடைய போனில் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். நாளைடைவில் ஆன்லைன் விளையாடுக்கு அடிமையாகியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாகவே ஆன்லைன் ரம்மி விளையாட்டை தீவிரமாக விளையாடி வந்துள்ளார்.

ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் பணத்தை  இழந்துள்ளார். முதலில் தன்னிடம் இருந்த பணத்தை கொண்டு ரம்மி விளையாடி வந்துள்ளார். தன்னிடம் இருந்த பணத்தை இந்த விளையாட்டில் இழந்ததும் தன்னுடைய தந்தையிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். மகனின் தொல்லை தாங்காமல் தன்னிடம் இருந்து சேமிப்புகளில் இருந்து பணத்தை கொடுத்துள்ளார்.

தனக்கு சொந்தமான இடத்தை சுமார் ரூ. 5 லட்சத்துக்கு விற்று அதில்  கிடைத்த பணத்தையும் ரம்மி விளையாட்டில் இழந்துள்ளார். இப்படியாக கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 15 லட்ச ரூபாயை இவர் இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தம்பி மனைவியின் நகையை ரூ.1 லட்சத்துக்கு அடகுவைத்துள்ளார். அதில் கிடைத்த பணத்தை கொண்டு ரம்மி விளையாடி அதனையும் இழந்துள்ளார்.

இதன்காரணமாக  விரக்தியடைந்த சிவன் ராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Local News, Online rummy, Tamil News, Tirunelveli