ஹோம் /நியூஸ் /திருநெல்வேலி /

தென்காசி குற்றாலநாதர் கோயிலில் திருவாதிரை திருவிழா தொடக்கம்..!

தென்காசி குற்றாலநாதர் கோயிலில் திருவாதிரை திருவிழா தொடக்கம்..!

ஆருத்ரா தரிசனம்

ஆருத்ரா தரிசனம்

Thiruvadhirai festival | தென்காசி மாவட்டம், குற்றாலநாதர் ஆலயத்தில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதும் பழமை வாய்ந்த தலமான குற்றாலநாதர் ஆலயத்தில் திருவாதிரை திருவிழா வேத மந்திரங்களுடன் கொடியேற்றப்பட்டு இன்று தொடங்கியது. 

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலத்தில் பிரசித்திபெற்றதும் பழமைவாய்ந்த தலமான குற்றாலநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை விசு திருவிழா, ஐப்பசி விசு திருவிழா, மார்கழி திருவாதிரை திருவிழாக்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும்.

அந்தவகையில் இன்று அதிகாலையில் மார்கழி மாத திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு குற்றாலநாதர் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் 16 வகை முலிகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வேத மந்திரங்களுடன் பஞ்ச வாத்தியங்கள் இசைக்க கொடியேற்றப்பட்டது.

இதையொட்டி கோவில் கொடிமரம் முன்பாக நடராஜமூர்த்தி,சுவாமி, குழல்வாய்மொழி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர் இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 5ம் திருநாள் 01.01.2023 அன்று தேரோட்டமும், 8ம் திருநாள் பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திரசபையில் தாண்டவ தீபாராதனையும் சிகர நிகழ்ச்சியாக 10ம் திருநாள் திரிகூட மண்டபத்தில் நடராசமூர்த்திக்கு ஆருத்ரா தரிசனமும் தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது.

மேலும் இவ்விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளும் கட்டளைதாரர்களும் செய்து உள்ளனர்.

செய்தியாளர்: ச.செந்தில், தென்காசி 

First published:

Tags: Tenkasi